பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

67


வாகைச் சூடினார். லாயிட் ஜார்ஜ் அமைச்சரவையில் போர்த் தளவாட அமைச்சரானார்.

சர்ச்சில், தனது வாணாளில் பல பதவிகளைப் பெற்றிருந்தாலும், எழுத்துத் துறையை மட்டும் அவர் எப்பொழுதும் கைவிடாமலேயே இருந்தார்.

1948 முதல் 1953-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டாவது உலகப் போர் பற்றிய செய்திகளை அவர் ஆறு தொகுதிகளாக வெளியிட்டார். அந்தப் புத்தகங்கள் உலகப் புகழைப் பெற்றன. சர்ச்சில் சிறந்த இலக்கிய வித்தகராக உலகக் கல்விமான்களால் போற்றப்பட்டார்.

சர்ச்சில் நூல்களைப் பாராட்டிய நோபல் நிறுவனம், 1953-ஆம் ஆண்டில் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு இலக்கியவாதி பிரிவின் விருதினை நோபல் பரிசாகத் தந்து பெருமைப்படுத்தியது.

போர்க் கால நிருபர்துறையிலே தனது எழுத்துப் பணியைத் துவங்கிய வின்ஸ்டன் சர்ச்சில்; உலகம் போற்றும் ராஜ தந்திரிகளுள் ஒருவராக, சிறந்த பத்திரிகை நிருபராக மதிக்கப்படுமளவுக்கு உயர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

அமெரிக்கப் போர் நிருபர்
எர்னஸ்ட் ஹெமிங்வே

அமெரிக்க நாவல் துறையில் புகழ் பெற்றவர் எர்னஸ்ட் ஹெமிங்வே என்ற போர்க்களச் செய்தி நிருபர். அவர் அமெரிக்காவில் கில்லினாய்ஸ் என்ற மாநிலத்தில் ஓக்பார்க் என்ற நகரில், 2.7.1899-ஆம் ஆண்டில் பிறந்தார்.

எர்னஸ்ட் ஹெமிங்வே ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, அனுபவம் வாய்ந்தவராக இருந்தவராதலால் ‘டோரண்டோ ஸ்டார்’ ‘Toranto Star’ என்ற பத்திரிகை நிறுவனத்தில் போர்க் கள நிருபராகச் சேர்ந்து பணி புரிந்தார். அருமையான கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதினார்.

போர்க் கால நிருபராக ஹெமிங்வே பணியாற்றியதால், 1926-ஆம் ஆண்டில் அவர் ‘சூரியன் கூட உதிக்கின்றான்’ - The Fifth Column, என்ற நாவலை, தான் பார்த்த போர்ச்-