பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

71


பத்திரிகையான ‘பங்கிஜிதாயில்’ அடிக்கடி எழுதிச் சிறுகச் சிறுகப் புகழ் பெற்ற பத்திரிகையாளராக வாழ்ந்தவராவார்.

போலந்தின் யூதமொழி
பத்திரிகையாளர் :

போலந்து நாட்டின் தலைநகரான வார்சா என்ற நகரருகே உள்ள சிறு கிராமத்தில் 14.6.1904-ஆம் ஆண்டில் பிறந்தவர் ஐசாக் பஷீவிஸ் ‘Isaac Bashevis Shingar’இவர் யூதர்கள் குடியிருப்புப் பகுதியில் குடியிருந்ததால் இத்தீஷ் மொழியைக் கற்றாா்.

ருஷ்ய இலக்கியங்களையும் ஹீப்ரு மொழி இலக்கியங்களையும் நன்கு படித்தவர். இவருடைய தமையன் ஒரு நாவலாசிரியர். அதனால் சிங்கரும் எழுத்தாளராக விரும்பி ஏராளமான பிறமொழி நூல்களைப் படித்தார்.

அமெரிக்காவில் நடைபெற்று வந்த ‘யூத மொழி’ என்ற நாளேடு ஒன்றில் பிழை திருத்தும் பணியில் வேலை செய்தார். நாளடைவில் நியூயார்க் அருகே உள்ள புரூக்ளின் நகரில் ‘குலோபஸ்’ என்ற பத்திரிகையில் ஆசிரியர் பொறுப்பில் அமர்ந்து, சிறுகதை, கட்டுரை போன்ற பலவற்றை எழுதி அமெரிக்க மக்கள் இடையேயும், யூத இனத்தவர் மத்தியிலும் மிகுந்த புகழ் பெற்றவரானார்.

1934-ஆம் ஆண்டில் சிங்கர் அந்தப் பத்திரிகையில் ‘கோரேயில் சாத்தான்’ என்ற நாவலை எழுதி வந்தார். தொடர் நாவல் அல்லவா? மக்கள் அந்த பத்திரிகையை விரும்பி வாங்கி தொடர் நாவலைப் படித்து மகிழும் அளவிற்கு அவரது எழுத்து செல்வாக்குப் பெற்றுவிட்டது.

ஜெர்மன் படையெடுப்பால் 1935-ஆம் ஆண்டில் போலந்து நாடு சீர்குலைந்ததால், சிங்கர் போலந்து ஓடினார். பிறகு மீண்டும் அமெரிக்க வந்து புரூக்ளினில் உள்ள யூத நாளேட்டில் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

‘மஸ்கட் குடும்பம்’ என்ற நாவலை அந்த நாளேட்டில் 1945 முதல் 1948-ஆம் ஆண்டு வரை தொடராக எழுதியதால்,