பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4
இந்தியாவில் - இதழியல் கலை!
தோற்றம்! வளர்ச்சி! தொண்டு!


“உலக நாடுகள் பத்திரிகை வரலாறு” என்ற பகுதியில், ஒவ்வொரு நாட்டிலும், அவரவர் தாய் மொழிகளில் தோன்றிய பத்திரிகைகளில் சிறப்பான பத்திரிகைகளையும், அவற்றின் பணிகள் மக்களுக்கு எவ்வாறு பயன்பட்டன என்பதையும், அந்தந்த ஏடுகளில் எழுதிய பத்திரிகையாளர்கள் எவ்வாறெல்லாம் தங்களது எழுத்துக்களை ஆட்சி செய்து வெற்றி பெற்று உலக மக்கட்கு அறிவுத் தொண்டுகளை ஆற்றினர் என்ற முழு விவரச் சுருக்கங்களையும் படித்தீர்கள்.

‘இந்தியாவில் இதழியல்’ என்றால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பேசப்படும் இந்தியர்களின் தாய் மொழியில் வெளிவந்த பத்திரிகைகள் என்பதே பொருள். இந்த இந்திய பத்திரிகைகளின் தோற்றம், வளர்ச்சி, தொண்டு பல்வேறு வகைகளில் இருந்தாலும், அந்த இதழ்கள் ஒவ்வொன்றிலும் ஊடுருவி நிற்கும் கருத்துக்கள்; இந்திய மக்களின் சுதந்திர நலன்களுக்கு ஏற்ற கருப்பொருளாகவே காணப்பட்டன.

எம். சலபதிராவ் என்பவர், தான் எழுதிய Press என்ற நூலில் 1974-ஆம் ஆண்டில் குறிப்பிட்டுள்ளதுபோல, “இந்தியப் பத்திரிகைகள் : ஒரு சார்ந்திருக்கும் பத்திரிகைகளாகத் துவங்கப்பட்டவை. அவை இப்பொழுது வளர்கின்ற சமுதாயத்தின் பத்திரிகைகளாக, பல சவால்களுக்குப் பதில்