பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

இந்தியாவில் - இதழியல் கலை தோற்றம்! வளர்ச்சி! தொண்டு!


என்பவர். அவரது துணைவியாரின் பாலியல் தொடர்பான செய்திகள் அதில் வெளியானதைக் கண்ட ஹேஸ்டிங்ஸ் கோபமடைந்தார்.

அவருடன் மற்ற பெரிய அதிகாரிகளான சிமியோன் ட்ரோஸ் (Simon Droz), தாமஸ் டின் பியர்ஸ் (Thomas Dean Perase), சுவீடன் கிறித்துவ மதகுரு ஜான் சக்காரியா கிர்ரெண்டர் (John Zacharaiah Kierender) மற்றும் சிலர் ஹிப்பியின் கடுமையான எழுத்து நடைத் தாக்குதலுக்குப் பலியானார்கள்.

தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது ஊழல் புகார்களும், அதற்கான சலுகைகளுக்காக அவர் செய்த லஞ்ச லாவண்ய விளையாடல்களையும்; அதே நேரத்தில் கம்பெனி அதிகாரிகளுடன் ஹேஸ்டிங்ஸ் துணைவியார் நடத்தி வந்த தகாத உறவுகளையும் கடுமையாகச் சாடி ஹிக்கி எழுதியதால், தாள முடியாத அவமானத் தீயினாலே ஏற்பட்ட புண் காயங்களை எண்ணியெண்ணி உள்ளுக்குள்ளேயே வேதனைப்பட்டதின் எதிரொலியால்: ஹிக்கிக்கு, அரசு பல இடையூறுகளைச் செய்தது. அந்த இடுக்கண்களிலே ஒன்று அவரது பத்திரிகைக்குரிய அஞ்சலகச் சலுகையைப் பறித்ததும் ஆகும்.

சுவீடன் பாதிரியார் ஜான் சக்காரியா, தன்மீது எழுதிய அவதூறுகளுக்காக நீதிமன்றத்தின் நெடும்படிக் கட்டுகள் மீது ஏறினார்: வழக்குத் தொடர்ந்தார். அதன் பயன், ஹிக்கி நான்கு மாதச் சிறைத் தண்டனையையும், 500 ரூபாய் அபராதத்தையும் பெற்றார்.

இந்த வழக்கு தான், இந்தியாவில் இங்லீஷ்காரர்களின் ஆணவத்தால், அகம்பாவ ஆட்சி நிர்வாகத்தால், லஞ்ச லாவண்ய ஊழல்கள் பெயரால் ஒரு பத்திரிகை மீது ஓர் ஆட்சி தொடுத்திட்ட முதல் வழக்காகும். இந்தியப் பத்திரிகையாளர்களில் ஓர் அரசை எதிர்த்து ஒரு பத்திரிகை ஆசிரியன் மன உரத்துடன், நேர்மையுடன், சந்தித்திட்ட முதல் வழக்கும் ஆகும்.

அதனால், அஞ்சா நெஞ்சன் ஹிக்கி, இந்த தண்டனைகளுக்கும் அரசு மிரட்டல் - பயமுறுத்தல்களுக்கும் அஞ்சாமல், தலைமை ஆளுநர் ஹேஸ்டிங்சையும் தலைமை நீதிபதி சர். எளிஜா இம்பே (Sir Ellijah Impey) என்பவரையும்