பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

89



சங்கராச்சாரியார்
சந்திரசேகரர்:

அண்ணல் மகாத்மா கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே, காஞ்சி பெரியவர் சந்திரசேகர பரமாச்சாரியாரும் பத்திரிகையாளர்களுக்குச் சில நெறிகளைக் கூறியுள்ளார். அவைக் கீழ்க்கண்டவை. :

“அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கும் வரையில் எல்லா கல்வியும் வாய்மொழியாகச் சொல்லி, காது வழியாகக் கேட்டே, வழிவழியாக வளர்ந்து வந்திருக்கிறது.”

“அந்தக் காலத்தில் பனை ஓலையில் எழுதுகிற தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு சிலரே இருந்தார்கள். மற்றபடி பெரிய வேத வேதாந்தம் தெரிந்தவர்கள்கூட எல்லாம் செவி வழியேதான் கேட்டறிந்தார்கள்”

“அச்சு இயந்திரங்கள் வந்தன. அப்புறம் நிறையப் புஸ்தகங்கள், நியூஸ் பேப்பர்கள் ஏற்பட்டு விட்டன. பெளராணிகர்கள் இடத்தை இவை பிடித்துக் கொண்டன”.

‘எனவே, பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் தான் இன்றை பெளராணிகர்கள். ஸுதரும் மற்றும் பெளராணிகர்களும் எப்படி தர்மங்களை ரஸமான கதைகள் மூலம் பொது ஜனங்களிடையே பிரச்சாரம் செய்தார்களோ, அவ்விதமே செய்ய வேண்டியது இன்றைய பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களின் கடமை’.

“ஜனங்களுக்குப் பிடித்ததை மட்டுமே சொல்வது என்று வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களின் அறிவை, மனத்தை உயர்த்துகிற விஷயங்களையே எழுத வேண்டும். இதைச் சுவாரசியமாகச் செய்ய வேண்டும். உத்தமமான விஷயங்களைப் புதுப்புது விதங்களில் உணர்த்த வேண்டும்”.

“பத்திரிகையாளர்கள் வாழ்நாள் முழுவதும் மாணாக்கர்களாகவே இருந்தால்தான், இப்படிப் புதுப்புது விஷயங்களை அறிந்து மற்றவர்களுக்குப் பிரச்சாரம் செய்ய் முடியும்”

“சத்தியத்தை சர்க்கரைப் பூச்சிட்ட மாத்திரைகளாக்கித் தரவேண்டும். சர்க்கரைப் பூச்சுத்தானே ஒழிய, முழுவதும்