பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

93


வெளிவர ஆரம்பித்தன. அதே வேகத்தில் அவை வளர்ச்சியும் பெற்றன. அதனால், பத்திரிகைகள் ஒழுங்கு முறைச் சட்டத்தை கம்பெனி நிர்வாகம் 1790-ஆம் ஆண்டில் கொண்டு வந்தது. இந்த ஒழுங்கு முறைகளால் இதழ்கள் நன்கு வளர்ச்சிப் பெற்றன.

அந்த வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக : கல்கத்தாவிலிருந்து ‘ஏசியாடிக் மிரர்’ (Asiatic Mirror) என்ற பத்திரிகை 1794-ஆம் ஆண்டிலும், 1791-ஆம் ஆண்டில் ‘ஓரியண்டல் ஸ்டார்’ (Oriental Star) என்ற இதழும், 1795-ஆம் ஆண்டில் ‘கல்கத்தா கூரியர்’ (Calcutta Courier-ரும், ‘இண்டியன் அப்பல்லோ’வும் ‘பெங்கால் ஹாரகாரு’ என்ற ஏடு 1795-ஆம் ஆண்டிலும் ‘டெலி கிராப்’ (Telegraph) எனும் தாளிகை 1796-லும் ‘ரிலேட்டர்’ “Relater” எனும் இதழ் 1799-ஆம் ஆண்டிலும் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டே இருந்தன.

வாரன்ஹேஸ்டிங்ஸ் தலைமை ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகிச் சென்றதும், லார்டு வெல்லெஸ்ஸி (Lord Wellesley) என்பவர் 13.5.1799ல் தலைமை ஆளுநராகப் பதவியேற்ற பின்பு, பத்திரிகைகளுக்கான ஒழுங்குமுறைகள் திட்டம் ஒன்றை அவர் வெளியிட்டார். அவை இவை :

ஒவ்வொரு இதழிலும் அதனை அச்சிடுவோர், ஆசிரியர், உரிமையாளர் பெயர்களை வெளியிட வேண்டும். ஏன் இந்த திட்டம் பிறந்தது? சிரிக்கக் கூடாது : சிந்திக்க வேண்டும். ஏனென்றால் இன்றும் நாம் நமது பத்திரிகைகளில் மேற்கண்ட முறையைப் பின்பற்றி வரும் சட்டமாக இருக்கின்றது. அதனால் சிரிக்கக் கூடாது என்றோம்.

தலைமை ஆளுநர் வாரன்ஹேஸ்டிங்ஸ் துணைவி யாருடைய பாலியல் அசிங்கங்களை, வங்காள கெசட் பத்திரிகையின் ஆசிரியரான , ஹிக்கி என்பவர் தனது பத்திரிகையில் எழுதுவதற்குக் கட்டுரையாக்கியிருந்தக் கருத்தை, வேறோர் ஆட்சி எதிர்ப்புக் கம்பெனி ஊழியர் எடுத்துக் கொண்டு சென்று துண்டறிக்கையாகப் (12’x8” அளவில்) பக்கமாக்கி, அதனை மக்களுக்கு வெளியிட்டு அக்கருத்தை முன்கூட்டியே பரப்பி விட்டார்.