இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
100
இதழ்கள்
鑫 இதழ்கள் இன்ன்ொரு உறவில் ஒன்று விட்ட அத்தை. அத்துடன் அவள் மாமியார் ஒரு தமிழ்ப் பண்டிதரின் பெண். மூடு சூளையாய்ப் பேசாவிட்டால், மாமியாருக்குப் பேசவே வராது. ஆனால் மாமியாரால் பேசாமல் இருக்க முடியாதாகையால், மூடு சூனையாய்த்தான் பேசிக் கொண்டிருப்பாள். நல்ல வேளை யாய் அவள் பேசுவதில் பாதி சமயம், பாதியது புரியாமலே போய் விடுவதால் இந்த மட்டுமாவது பிழைக்கிறது. ாட்டா, ஒண்ணொண்ணையும் எடுத்துக் கட்டிண்டு, க்கென்ன அர்த்தம், அதுக்கென்ன அர்த்தம்? இப்போ ஏன் அப்படிச் சொன்னாள். அப்போ ஏன் இப்படிச் சொன் னான்னு ஒவ்வொரு இடைச் சொருகலையும் ஆராய ஆரம்பிச் சுட்டா இந்த வீட்டில் ஒரு காரியம் ஓடாது. கிழவி பெருமூச்செறிந்தாள்.
- உனக்கும்தான் பாகி. ஆயிரம் நன்னாப் பண்ணிப் போட்டாலும், அம்மா கச்சட்டியிலே மாவைக் கரைச்சு ஊத்தாமல் சுண்டக் காச்சித் தேனாய் வைக்கற வண்டைக்கா வெத்தல் கொழம்புதானே வேண்டியிருக்கு, அப்படியே அடிக்கச் சட்டிலே ஆவி பறக்க என் கையாலே சாதம் போட்டுக் கிளறிப் பிரட்டி, தொட்டுக்கக்கூட இல்லாமல், முன் பிடிக்குப் பின் பிடி துணையாய் உருட்டி உருட்டி உள்ளே போட? அதனால் என்னத்துக்குச் சொல்ல வந்தேன்னா, தாய்க்கும் பிள்ளைக்கும் என்னிக்கும் விட்டுப் போகாது. கர்ப்பவாஸ்ம் என்கிறதுக்கு அவ்வளவு பவர் இருக்கு! ஏதோ மனுஷ ஜன்மத்துக்கு வித்தைப் பத்து மாசம் சுமக்கற துன்னு வெச்சிருக்கு. நீ இந்தக் குழந்தையை பன்னண்டு வருஷம் சுமக்கணும்னு பகவான் சொல்றான்னு வெச்சுக்கோ: மாட்டேன்போம்னு தெனைக்கிறையா? ஒரு நாளுமில்லை. சந்தோஷத்தோடு, ஆனந்தத்தோடு சுமப்போம். அப்பறம் இதுகள் எல்லாம் மரத்தை வேரோடு வெட்டிச் சாய்க்கப் போறதுங்கற ஆசை. எல்லாத்தையும் பாத்தாச்சு. நான் பாக்க வேண்டியது இன்னும் பாக்கியில்லே.”
ாைரதிக்கு அவனை அறியாமலே முகம் சுளித்தது. தோலைச் செருப்பாய்த் தைத்துப் போட்டாலும் இந்த