பக்கம்:இதழ்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

103

இதழ்கள் 103

'நான் ஒரு அம்பிப் பாப்பாவுடன் திரும்பி வருவேன்' என்று சொல்கையில் அவள் அவ்வார்த்தைகளைப் பாபுவுக்குச் சொல்லவில்லை. தன்னைச் சூழ்ந்த மற்றவர்களுக்கும் சொல்லவில்லை. ஒருவருக்குமே தனியாய்க் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. உலகில் உயிரின் தோன்றுதொட்டிலிருந்து அதன் இருப்பிற்கு ஆதார நியாயத்தை யாவருக்கும் அறிவிக் கும் முறையில் அவள் வார்த்தைகள் அமைந்தன. அவைகளின் தொனியில் ஒரு அசரீரம் இருந்தது. அவள் அப்படிச் சொல் கையில் அவள் கணவன் நெஞ்சில் இன்னதெனப் புரிபடாத ஒரு பரவசமான கிளர்ச்சி உண்டாயிற்று. 'அம்பிப்பாப்பா இல்லேடா. அங்கச்சிப்பாப்பா' என்றான். அவனுக்கென்னவோ இம்முறை ஒருபெண் குழந்தைமேல் ஆசை. அதுவும் அவன் தாயின் செந்தாழை நிறமும் பாகியின் தீர்ந்த மூக்கும் அவனுடைய தலைமயிர் அடர்த்தியும் அதற்கு வாய்த்துவிட்டால்- அப்பா குழந்தை கொத்திண்டு போறாப் போல் தானிருக்கும். தன்னிடம் ஒட்டிக்கொள்ளும் படியாய்ப் பார்த்துக் கொள்ளவேண்டும். பாபுபார், தன்னைப் பார்க்கையிலேயே அந்நியனைப் பார்ப்பதுபோல் அவநம்பிச் கையுடன்கடுகடுப்புடன் பார்ப்பதை வண்டிக்காரனிடமிருந்து ஜாட்டியைப் பிடுங்கிப் பயலை வீறு வீறுன்னு வீறினால்தான் ஆத்திரம் தணியும்போல் இருந்தது. பாகி கணவன் பக்கம் முகம் திருப்பினாள். அதில் விசனம் லேசாய்ப் படலமாடிற்று. 'பொன்னுக்கு ஏன் ஆசைப்ப்ட்றேள்? நமக்கு என்ன யோக்யதை யிருக்கு? உலகத்தில் பொண்ணாய்ப் பிறந்த வாளும் பொண்ணைப் பெத்தவாளும் ப்டற கஷ்டம் போறா துன்னு நானும் அதுக்குக் கூட்டணுமா?” ஆஹா, ஏன்ன மேதா விலாசம், என்ன வாக் விலா சம்!” கிழவி கேலி பண்ணினாள். ஏன்னா பொண்ணைப் பெத்துக்கறதோ புள்ளையாப் பெத்துக்கறதோ உங்கள் கைலே அடங்கி யிருக்கு, பாரு பாகி, நீ என்னவோ இப்படி, பேசறையே யொழிய, லோகத்தில் பெண்கள் பொறந்துண்டு தானிருக்கு. அதுவும் இந்தக் குடும்பத்துக்குப் பெண்வளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/103&oldid=1247201" இலிருந்து மீள்விக்கப்பட்டது