பக்கம்:இதழ்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

107

இதழ்கள் {{}}

அம்மா! அம்மா பாகி வாயில் மண்ணைப் போட்டுட் L–Fs lo 'என்னடா பேத்தரே?’ 'இல்லெம்மா, நிஜம்மாத்தான் ஐயையோ! நான் என்ன செய்வேன்? ஸ்ாரதி கூடத்தில் குப்புறப்புரண்டு அறிைனான். 'பாட்டி நேக்குப் பயமாயிருக்கே பாபு கையை உதறிக் கொண்டு அழ ஆரம்பித்தான். கிழவி அவனை அப்படியே சேர்த்து அனைத்துக்கொண்டாள். அவள் முகம் மூர்க்கமாய் அவள் மகன்மேல் திரும்பியது. டேய். குழந்தை பயப்படறான்; நீ மனுஷனா? ஆண் புள்ளைடா நீ, ஸாரதி; ஞாபகப் படுத்திக்கோ-’ அவள் வார்த்தைகள் சாட்டை போல் அவனை அடித்தன. ஸ்ாரதி எழுத்து உட்கார்த்தான். அவன் தன் தைரியத்தை மீண்டும் பெறச் செய்யும் தீவிரமான பிரயாணத் தில் அவன் முகம் கோரணியடைந்தது. "ஆமாம் அம்மா, என்னை மன்னிச்சுடு,' பாட்டி அம்மா எங்கே? இன்னிக்கு வரணுமே?-” 'பாபு அம்மா வரமாட்டாள்.' 'வரமாட்டாளா? ஏன் பாட்டி?” "வரவே மாட்டாள்.' 'ஹ' பாபுவுக்கு ஒரு மூச்சே போய் ஒரு மூச்சு வந்தது. அவ்வளவுதான். உள் முறிவுக்கு மாத்திரம். வர மாட்டாளா? சப்தமே கிடையாது. ஆனால் இழந்த மூச்சு மாத்திரம் இழந்தது இழந்ததோடு அது அது நெஞ்சில் விட்டுப் போகும் ஒட்டையை இட்டு நிரப்புவது என்பதுமில்லை. 'அப்பா எனக்குக் குளுர்றது அப்பா!' "இங்கே வா பாபு.” இரண்டு கைகளாலும் அவன் தகப்பன் அவனை வாரி யனைத்துக் கொண்டான். திடீரென அவன் மகனுக்காக அவன் நெஞ்சில் தீராத பசியெடுத்தது. மகன் அணைப்பில் நெஞ்சு ஆதரவைத் தேடுகையில் இத்தனை நாள் கரிப்பும் திடீரென அமுதமாய் மாறும் வேதனை பயங்கரமாயிருந்தது. அப்பா!' 12,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/107&oldid=1247205" இலிருந்து மீள்விக்கப்பட்டது