பக்கம்:இதழ்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

109

6. இதழ்கள்
  • பார்க்கவி பார்க்கவி!!”

பார்க்கவி அசைந்துகூடக் கொடுக்கவில்லை. தலையணை மீது ஐந்து தலை நாகம் படம் விரீத்தாற்போல் கூந்தல் ஐந்து பிரிகளாய் அவிழ்ந்து அலை மோதிற்று. 'அடி நாட்டுப் பெண்ணே!” (நாறப் பொண்னே!) பார்க்கவி மல்லாந்து படுத்தபடி கால் கட்டைவிரலி லிருந்து கழுத்து வரை தன் உடலைக் கண்ணோட்டம் விட முயன்றாள். துரக்கத்தில் மேலாக்கு இடுப்புவரை இறங்கி விட்டது. ஆனால் இன்னும் அவள் சரி பண்ணிக்கொள்ண் ஆரம்பிக்கக்கூட இல்ல்ை. இப்பொழுது கிடக்கையில் அங்கங் கள் தளர்ந்து வீழ்ந்து கிடக்கும் இதவில் ஒரு விரலைக்கூட அசைக்க மனமில்லை. 'அடீ ராணியம்மா காப்பி கலந்தாச்சு, எழுந்திருக்க மனசு பண்ணலாமே!’ கரும்பலகையில் ஆணியால் கோடு இழுத்தாற்போல் கிறீச்சிட்டு, கீழிருந்து அக்குரல் எட்டிற்று. பார்க்கவிக்குச் செவி தரம்புகள் துடித்தன. பல்லைக் கடித்துக் கண்களை இறுக மூடிக் கொண்டாள். இன்னிக்கு என்ன வேணு மானாலும் ஆகட்டும்; நான் இறங்கப் போறதில்லை. இந்த வீட்டில் இது வரைக்கும் நான் போடறபோதே, ஆறவெச்ச க்ாப்பி நான் குடிச்சதில்லையாக்கும்! இன்னிக்குன்னு நாட்டுப் பெண் மேலே அலாதி அக்குசு வந்திருக்காக்கும் கத்துங்கேர: கத்துங்கோ, நன்னாக் கத்துங்கோ. இனி என்ன பயம்? புத்து பந்து செத்ததுக்கெல்லாம் பலனை அனுபவிக்சாச்சு. இனிமே பயப்படாமே போற ஆபத்தில் போனாப் போறேன். பார் பார், இதோ வரார்-இந்தச் சரீரத்தைத் தாக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/109&oldid=1247207" இலிருந்து மீள்விக்கப்பட்டது