பக்கம்:இதழ்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

111

இதழ்கள் 1 : ;

"ஊஹாம், நீ சொன்னால் தான் கேட்பேனா என்ன? இன்னும் கொஞ்ச நாழி படுத்திண்டிரு; அதுக்குள்னேயும் வந்துTடும்.’’ "என்னது?’ பார்க்கவிக்குப் புரியவில்லை. 'சந்தனப் பேலாவும் கொட்டுமேளமும் சொல்லி யனுப் பிச்சிருக்கேன், உன்னைப் பள்ளியெழுப்ப.” நாக்கிலிருந்து ஒருங்கே குதிக்க நானூறு வார்த்தைகள் எண்ணங்கள், விஷயங்கள், உணர்ச்சிகள் தவித்தன. ஆனால் பார்க்கவிக்கு வாயடைத்து விட்டது. 'எனடி, முழி முழின்னு முழிதானிருக்குன்னு முழிக்கிறே? கொம்பேறி மூக்கி!” சவுக்கு துணியில் கட்டிய ஈயக் குண்டு போல் வார்த்தைகள் திடீரெனத் தெறித்தன. "நீ வந்ததே மொதக்கொண்டு வீடு சுபிக்ஷமா யிருக்கேன்னு மூதேவி வேறு கொண்டாடியாறதோ? இந்தத் தள்ளாத வயசுலே, என்னை ஒக்காத்தி வெச்சுத் தாங்கற நாளுலே, நான் பட்டதெல்லாம் போறாதின்னு நான் போட்டு வச்ச காப்பியைக் குடிக்கறதுக்கு நானே மாடியேறிக் கூப்பிடணுமாக்கும். தவிடு திங்கறதுலே ஒய்யாரம் வேறே!” சரி, இன்னிக்கு முழிச்ச வேளை சரியில்லே, இன்னிப் பொழுது நல்ல போதாப் போகனும், இன்னிக்குத்தான்னு உடம்பு என் வசத்துலேயில்லே. பார்க்கவி பதில் பேசவில்லை. படுக்கையைச் சுருட்டி விட்டு எழுந்து நின்றாள். மாமியார் வாயிலை அடைத்துக் கொண்டு நின்றாள். பறங்கிப்பழ மேனி, தாடைச் சதையும் கழுத்துச் சதையும் தளர்ந்து இறங்கி, பேச்சில் வாயசைகையில் தாமும் ஆடின. சிங்கப்பிடரி போல் கூந்தல், மூப்பு மஞ்சள் பூத்து மயிர்க் கால்களிலிருந்து முரடிக்கொண்டு எழுந்து ஒடிற்று. அம்மா மஞ்சள் இழந்து எத்தனையோ வருடங்கள் அவள் இந்த வீட்டுக்குள் புகுவதற்கு முன்னாலேயே-ஆசி விட்டன. ஆனால் அவள் முகத்தில் இன்னும் லக்ஷ்மி பெருகினாள். கைராசி இன்னமும் விளங்கிக் கொண்டுத்ானி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/111&oldid=1247209" இலிருந்து மீள்விக்கப்பட்டது