இதழ்கள்
113
இத்ழ்கள் } j2.
தவலையைத் தூக்கிக்கொண்டு பார்க்கவி கிணற்றடிக்குச் சென்றாள். . என்னிக்குத்தான் எனக்கு விடியுமோ? இன்னிக்கு முழிச்ச வேளை சரியில்லே. எதன் முகத்துலே மூழிச்சேன்? வழிக்கப்படி பூ முகத்துலே முழிக்கல்லையா? பூ முகத்துலே முழிக்கணும்னு தானே தினம் ஜன்னலோரம் படுக்கையை கோட்டுக்கறேன்! பகவான் பூவைத்தான் விடுங் క్షీ டார்னா, பூ முகத்துலேகூட முழிக்கக்கூடாதுன்னு இருக்கா? ஆனால் என் மாதிரி ஆயிட்டவாளுக்கெல்லாம் நல்ல சகுனிந்து கெட்ட சகுனம் எல்லாம் ஏது? நாங்களே தான் பெரிய சகுனமாயிடறோமே, நீயும் நானுமடி, எதிரும் புதிருமடின்னு: அம்மா பாடறமாதிரி..." . . o இருந்தாலும் அவளுக்குப் பூவின் மேல் அபரிமிதமான் ஆசைதான். (அதனாலேயே அதை அவள் இழந்துவிட் டாளோ?) இந்த ஆசை சுயம் மாத்திரம் அல்ல; அதில் கொஞ்சம் பரம்பரை வாசனையும் கலந்திருந்தது. அவள் தகப்பனார் ஒரு நந்தவனத்தைப் பார்வையிட்டுக் கொண் டிருந்தார். தோட்டத்தின் நடுவில் பர்ணசாலைபோல் ஒரு ஒலைக் குடிசை. ராத்திரி வேளையில் ஜில் காற்று ஆனைத் தேவலோகத்துக்குக் கொண்டு போய்விடும். ‘அப்பா கயிற்றுக் கட்டிலைப் போட்டுண்டு உட்கார்ந்துடு வர். அப்பா தாடி வளர்த்துண்டிருத்தார். ஏனோ தெகியல்லே. தனக்குள்ளே ரிஷீன்னு தியானமோ? கருகருன்னு தாடி தொப்புள் வரை யிறங்கி மாலைக்காற்றில், ஜோரா வெட்டி வேர்த் தட்டி மாதிரி மெதுவா அசைஞ்சுண்டிருக்கும். அப்போ வாத்யத்தில் ஸ்வரப்பற்களை அமுக்கின மாதிரி ஒரு ஒரு சமயம் வித விதமான பூ வாசனை ஒண்னும் பின்னாலே ஒண்னு காற்று வாக்கிலே கிளம்பும். அப்பா தாடியை உருவிக் கொண்டே ஒவ்வொண்ணா ரொம்ப நுட்பமான அடையாளம் கூடத் தப்பிப் போகாமல் சொல்வார். பூ விஷயத்தில் அப்பாவுக்கு மிஞ்சித் தெரிஞ்சுக்க ஒண்னுமேயில்லை. பூ மாத்திரம் என்ன? எதைப் பற்றியும் அவரால் அப்படிப் பேச் முடியும்.'