114
இதழ்கள்
3 #4 இதழ்கள் அதுமாதிரி ஒரு சமயம் : "அதோ அந்தப் பூ என்னோடே பேசறதும்மா! அதோ, அந்தச் சிவப்புலே வரி வரியா வெள்ளைக்கோடு போட்டிருக்கே ஆ, அதான்!” “என்னப்பா பேசறது? அப்போ எல்லாம் அவளுக்கு அப்பா வாக்கு வேதவாக்கு போகப் போகத்தானே தெரியறது. யார் யார் வார்த்தை எவ்வெவ்வளவு எடை தாங்கும்னு? ஆனால் அவர் வாயை வெறுமெனக் கிண்டினா லும் அவர் எப்பவும் சுவாரஸ்யமா யிருப்பார். அவள் கேள்வி காதில் விழாததுபோல் அவர் இருந்தார். “பூ என்னப்பா சொல்றது?’ “என்னத்தைச் சொல் ற துன் னா என்னத்தைச் சொல்றது' ஒரு முறைக்கு மறுமுறை கேட்டால் அவருக்குக் கோபம் வந்து விடும். உங்கள் மாதிரியெல்லாம் உள்நாக்கு தெரிய வாயைத் திறந்து வளவளன்னு வம்பளந்தால்தான் பேச்சா? பேச்சுன்னா பேச்சு என்று அர்த்தமில்லை. பேச்சுன்னா பாஷை என்று அர்த்தம்.’’ "இப்போ இதன் பாஷை என்ன பாஷை?” *அது அதுக்கு அதனதன் பாஷை உண்டு.” 'இப்போ இதன் பாஷை என்ன பாஷை’ ‘பூவின் பாஷை அதன் மணம்தான்.” 'மனக்காத பூக்கள் இருக்கே!” 'மணக்காத பூக்களின் பாஷை அவைகளின் அழகு 3 لإ: عمحيي தான. ‘அழகில்லாத பூக்கள்?’ "அழகில்லாட்டா மணமிருக்கும். மணமில்லாட்டா அழகிருக்கும்.” 'மணமுமில்லே அழகுமில்லே, அப்போ?” “அது பூத்திருக்கே அதான் அதன் பாஷை.” "பூக்காத பூக்களைப்பற்றி என்ன சொல்றேள்?” சட்டென ஒரு ஊமைத்தனம் அவர்களிடையே திடீ ரெனத் தேங்கிற்று. அதனால்தான் என்னடா அப்பா பதில் பேசலையே என்று அவள் தலை நிமிர்ந்து பார்த்தாள். அவர்