பக்கம்:இதழ்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

115

இதழ்கள் j is

அவளை ஒரு தினுசாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார். விழிகள் தழலாய் மாறியிருந்தன. சற்று நேரங் கழித்து அவர் வார்த்தைகள் சாதாரணமாய் வந்தாலும் அந்தக் குரலைக் கேட்க அவளுக்குப் பயமா யிருந்தது. ரிஷியின் சாபம்போல், "பார்க்கவி, நீ ஒரு அபஸ்மாரம். ஆமாம். சந்தேகமே யில்லை. ஒரு அப்ஸ்மார்ம்.” "ஏம்பா திடீர்னு கோவிச்சுக்கறேள்? நான் என்ன பண் னிட்டேன்?’’ "நீ இன்னும் என்ன பண்ணனும்? பெண்ணாய்ப் பிறந் தூட்டு பூக்காத பூக்களைப்பற்றி உனக்கு முதலில் எண்ணம் தோணித்தே, அது போதாதா? நீ ஒரு அபஸ்மாரம்." “என்னப்பா நீங்கள் ஏதோ சொல்லிண்டே வந்தேன். நானும் ஏதோ கேள்விகள் கேட்டுண்டே வந்தேன். இதில் உங்களுக்கும் எனக்கும் என்ன தர்க்கம்? இதில் என்ன தப்பு?-அவள் உதடுகள் கோப அழுகையில் நடுங்கின. 'பார்க்கவி! உன்மேல் நான் கோபிக்கவில்லை. ஆனால் கேட்கத் தோன்றினாலும் கேட்கக்கூடாத கேள்விகள் இருக் கின்றன. செய்யக்கூடாத காரியங்கள், சொல்லக்கூடாத வார்த்தைகள், கேட்கக்கூடாத கேள்விகள் - இதில் நான் எதையும் மன்னிச்சுடறேன். ஆனால் தோன்றக்கூடாத எண் ணங்களை எண்ணுபவர்கள் தோன்றவே கூடாது. அப்படித் தோன்றினால் அவர்கள் ஒரு சாபக்கேடு. அவர்களுடைய எண்ணங்களுக்கு அவர்கள் பொறுப்பாளிகளல்ல. ஆனால் அவர்களுடைய எண்ணங்களுக்கு மட்டும் எண்ணியபடியே செயலாகிவிடும் வலிமையுண்டு. அப்படிப் பலிக்கையில் அவர் களைச் சுற்றி எப்பவுமே சூன்யந்தான். அப்போது அவர்கள் ஆபத்தான பிறவிகள் ஆகி விடுகிறார்கள்.” அவர் விசனத்துடன் பெருமூச் செறிந்தார். எழுந்து போய் எதிரே ஒரு செடியிலிருந்து ஒரு பூவைக் கிள்ளிக கொண்டு திரும்பிவந்து கட்டிலில் உட்கார்ந்தார். 'பார்க்கவி, நீ பிறந்தாய்; பிறந்து ஒரு வாரத்தில் உன் தாயாரை உருட்டிவிட்டாய்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/115&oldid=1247213" இலிருந்து மீள்விக்கப்பட்டது