பக்கம்:இதழ்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

117

இதழ்கள் 117 நடந்தது, என்னவாய் நடந்தது என்று கேட்டாலும் நினைத் தாலும் எனக்கே திகைப்பாயிருக்கிறது.”

இன்னிக்கு அப்பா பேச ஆரம்பித்ததை அதுவே முடியற வர்ைக்கும் பேசி முடிப்பார். இன்னிக்குணம் அவருக்கு அப்படியிருந்தது. "கடன்காரருக்குப் பயந்து முகமறைவாய் 函汗母 வளர்த்துக் கொண்டு இடமே மாறி வந்துட்டேன். ஆனால் பாம்புப் பிடாரன் கூடவே பாம்புபோல், நான் எங்கு போனாலும் என்னோடு நீ. 'பாம்புப் பிடாரனுக்குப் பாம்பாலேயே சாவு என்று ஒரு வசனம் உண்டு. அது வீண் போகாமல், நீ பிறந்த உ. னேயே என்னைக் கடித்தாய் விட்டது. நான் சாகவில்லை. ஆனால் உயிரோடு இல்லை. இனிமேல்தான் என்ன நடக்கப் போகிறதென்று தெரியவில்லை. நீயும் ஆளாகி விட்டாய். பூக்காத பூக்களைப்பற்றி என்னோடு தர்க்கம் பண்ணிக் கொண்டிருக்கிறாய். சே, என் பிழைப்பு ஒரு பிழைப்பா!' காம்போடு இதழை வீசி எறிந்தார். பூமியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். - அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்பாவுக்கு இன்னிக்கு என்னவோ வெறி, தெரியல்லே! தன்னுடைய தோல்விகளுக் கெல்லாம் அவளைப் பொறுப்பாக்கிக் கொண்டிருந்தார். அது தெரிந்தது. X X X உச்சி வெய்யில் கூட அவ்விடத்தில் தெரியாது; அவ்வளவு குளுமை. அது அவளுடைய ரகஸ்ய இடம். ஆற்றுக்கரை மேட்டில் ஒட்டினாற்போல் நின்ற இரு தென்னங் கன்று களிடையில், நெருக்கமாய்ச் செந்தாழம் புதர்கள் சூழ, ஒரு ஆள் மல்லாந்து படுக்குமளவு இடம் அங்கு யார் கண்ணுக்கும் புலப்படாது பதுங்கியிருந்தது. புதர்களின் நெருக்கத்தில் அங்கு எப்பவுமே தண்மை தரும் இன்ப இருள் தேங்கிற்து. அங்கு அவள் இப்பொழுது ஒரு புறமாய்ப் படுத்து இருக் கையில் பூமியைப் பொத்திய இடது செவியில், பூழிமேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/117&oldid=1247215" இலிருந்து மீள்விக்கப்பட்டது