118
இதழ்கள்
i 18 இதழ்கள் அதிரும் அத்தனை சப்தங்களும் படுகையில் பூமியின் நாடியே கேட்பதுபோலிருந்தது. இப்பொழுது குபீர் குபீர் என்று கிளம்பும் செந் தாழையின் மணம் சிந்தனையின் போதையுடன் கலக்கையில் நேரம் போக்கற்று நின்றுவிட்டது. இன்னமும் சாப்பிடவில்லை. வயிறு காலி. ஆனாலும் இன்று பசிக்கனும் சாப்பிடணும்னு தோணல்லே. ‘மாமியார்தான் எடுத்துப்போட்டுக் கொண்டு சாப்பிட்டு விட்டு ('என் கையும் காலும் என்வசமிருக்கிறவரைக்கும் நான் ஒருத்தர் கையையும் எதிர்பார்க்கப் போறதில்லை, ஈசுவரா, நான் காலும் கையோடு நல்லபடியா வளைய வரத்து லேயே என்னைக் கொண்டு போயிடு, இந்தப் பீடைகளிடம் காட்டிக் கொடுக்காமே!”) கொல்லை ரேழி வாசல்படி மேல் தலைவைத்துக் காலை நீட்டிக் குறட்டையும்விட ஆரம்பிச் சாச்சு. அங்குக் காற்று சொகம்மா வரும். சமையலறையில் போட்ட சாமான் போட்டபடி கிடக்கும். மாமியாரின் எச்சிற்கலை காஞ்சிண்டிருக்கும். எந்த சாமானை மூடி யிருக்கோ? திறந்து கிடக்கோ? கிடக்கிறது கிடக்கட்டும்; நான் தானே பாக்கி. சாப்பிட்டாலும் போச்சு, சாப்பிடாட் டாலும் போச்சு. இப்படியே சேர்ந்தாப் போலே ஒரு பத்து நாள் சாப்பிடாமல் இருக்க முடிஞ்சா நான்கூட பாக்கியில் லாமல் ஆயிடுவேன். நான் செத்த அப்புறம் எனக்கென்ன தெரியப்போறது?’ அப்படி நினைத்தாலும் அவளால் பசி தாங்க முடியாது என்று அவள் நன்கு அறிவாள். இந்த வீட்டுக்கு வந்த பிறகு முதல் பகிரங்கத் தகராறே அதில்தான் ஆரம்பித்தது. மாமி யார் போர் மாதிரி சோற்றை உள்ளே இறக்கினாலும் சமயத் தில் மூன்று நாள் சேந்தாப்போல், முழுங்கு ஜலம் கூட இல்லாமல் வேலை செய்துகொண்டு சுறுசுறுப்பாய் வளைய வர முடியும். ஒருமுறை அவள் மாமியார் வம்படிக்க (தெரியாதா அவளைப்பற்றிக்குறைப்பட்டுக்கத்தான்!) பக்கத்திலே எங்கோ