உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

121

இதழ்கள் i2;

துடன் தெரிவித்துக்கொள்கிறோம் இல்லியா, அப்பா அடிக் கடி சொல்லுவா, இங்கிலீஷ் பாகூைடியில் பதவிசுக்குக் கேட் கணுமா? அதுதான் பாகா இழுபடுமே!’ என்று. அம்மாவுக்கு ஒரே ஆத்திரம். கொண்ட பெண்டாட்டி யையும் பெத்த குழந்தையையும் மானத்தோட காப்பாத்த வக்கில்லாதவாளுக்குத் தேசத்தொண்டு என்ன வேண்டிக் கிடக்கு? தன்னைக் காப்பாத்திக்க வழியில்லை, தேசத்தைக் காப்பாத்தப் போனானாம். போனானே போனானே. என்னை நடுச்சந்தியிலே நிக்கவிட்டுட்டு என் வயிறு எரியக் ண்டவாளெல்லாம் விடிஞ்சுடுவாளா?” ஆயிரம் கத்தியும் வயத்தில் அறைஞ்சுண்டும் என்ன பண்றது? சகுந்தலை மாதிரி குழந்தையை ஏந்திண்டு பிரிஞ்ச் இடத்திலேயே சேரும்படி ஆயிடுத்து. போன இடத்தில் இடிக்காமல் யார் விடறா? நீ வெச்சுக்கோ, நான் மாட்டேன் வேங்கைப்புலி!” என்று ஏலம்போட ஆரம்பித்துவிட்டார்கள். இப்போதுகூட நினைச்சுண்டு அம்மா ஆத்திரத்தில் அழு வார். அம்மாவுக்கு மூணு ஒர்ப்படிகளாம். அஃன்னா மாதிரி மூன்று பேரும் கொல்லை ரேழியில் உட்காந்திண்டு அம்மா முன்னும் பின்னுமாய்க் காரியமாய் நடமாடுகையில், அவளைப் பார்த்துக் கள்ளச்சிரிப்பு சிரிச்சுண்டே கும்.மியடிப்பார்களாம். ஒருத்தி போன மச்சான்-” என்பாள். இன்னொருத்தி (பிராசம் கெடாமல்) திரும்பிவத்தான்!” மூணாமவள் . பூமணத்தோடே! என்று தாளத்தோடு முடிப்பாள். அம்மா மூத்த நாட்டுப் பெண். உலகம் தெரிய ஒரு முறை சறுக்கினால் அப்புறம் ஒரே சறுக்கல்தான். "அப்படி யெல்லாம் சகிச்சுண்டு உன்னை ஆளாக்கினப் புறம் சாக்கடையில் போய் ஸ்நானம் பண்ணிட்டு வத்தை யேடா’ என்று அம்மா அடிபட்ட மிருகம்போல் கத்துவார். இந்த வீட்டில் எதைச் சாக்கிட்டு சண்டை வரும், அது எப்போ எப்படி ஒயும் என்றே சொல்ல முடியாது. வீட்டில் இ-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/121&oldid=1247219" இலிருந்து மீள்விக்கப்பட்டது