பக்கம்:இதழ்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

123

இதழ்கள் #23

கிடைச்சிருக்கு ஏமாந்த கொள்ளி அகப்பட்டான் என் பின் ளைன்னு அவன் தலையில் தோசியைக் கட்டியனுப்பிச்சுட் டானே! மறப்பேனா என்ன? ஒரு கல்யாணம்னா கிள்ளுக் கீரையா? முன்னே பின்னே பார்த்து ஜாதகம் குலம் கோத்திரம் பார்த்து விஜாரிச்சு, பெரியவாளைக் கலந்து யோஜிச்சு, ஆயிரம் யோசனை பண்ணி நாலுபேர் நடுவே தாலியைக் கட்டி வீட்டுக்குப் பொண்ணை இழுத் துண்டு வருவா. இந்த மாதிரி அக்ரமம் எங்கே நடக்கும்? யாருக்கு அடுக்கும்? இவதாம்மா பார்க்கவீ-(பழிச்சுக் காண் பிக்கிறார்) ஹி ஹீ ஹீ-உன் நாட்டுப் பொண்ணு... அம்மாக்கு வீந்து நமஸ்காரம் பண்ணு'- இவளை முன்னே பின்னே கண்டது யாரு? கோத்ரமே ஒண்ணாயிருந்தாலும் யாருக்கு என்ன தெரிஞ்சுது? எப்படி சம்பந்தம் பண்ணிட்டு வந்தானோ அப்படித்தானிருக்கும் அன்னியிலிருந்து வீடு. என்னிக்கு மகராஜியம்மா படி மிதிச்சாளோ அன்னியிலிருந்து அழிஞ்சு தய்யா என் குடும்பம்! என்னென்னெல்லாமோ ஆசை வெச்சுண்டிருந்தேன். இப்பவும் என்னை ஏமாத்திப்பிட்டான் என் சம்பந்தி அவனைக் கண்ணால் மட்டும் கண்டேன்னா கிழிச்சி மாலையாப் போட்டுண்டுட மாட்டேனா, அப்புதம் தூக்கேறினாலும் சரின்னு!” இன்னும் இதே ரீதியில் என்னென்னெல்லாமோ. அப்பாவுக்கு அழுவாளா? அம்மாவின் ஆத்திரத்திற்கு பயப்படுவாளா? அதென்னவோ வாஸ்தவந்தான். அம்மா தன் பிள்ளைமேல் என்னென்னவோ ஆசையெல்லாம்தான் வைத்திருந்தார். தன்னுடைய சரியான வயது நாளில் இழந்த பதவியெல்லாம் மீண்டும் பெற்றுவிடலாம் என்று வயிற்றையும் வாயையும் ஒடுக்கி, படாத பாடெல்லாம் பட்டு இவனைப் படிக்க வைத்து, யார் மூலமாகவோ சிபாரிசு புடிச்சு உத்யோகம் கூடப் பண்ணி வெச்சு-ஒரொரு நாள் சண்டை வருகையில் இடிச்சுக் காண்பிப்பார் என்னமோ உல்கத்தில் இல்லாத ஆம்படையானை ஏமாத்திப் புடிச்சுட்டேன்னு இறுமாந்துாடாதேடீ எனக்குப் புள்ளை, அப்புறந்தான் உனக்கு ஆம்படையான் :னக்கு முன்னால் என் வ்யத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/123&oldid=1247221" இலிருந்து மீள்விக்கப்பட்டது