பக்கம்:இதழ்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

127

இதழ்கள் 127

ருந்து மேடு எடுத்துக் கொண்டு எழுந்தது. அதை ஆயுசுக்கும் மறக்க முடியாது. அன்று வெள்ளிக்கிழமை மாலை. வெள்ளிக்கிழம்ை வந்தாலே நல்ல கிழமையாகப் போகவேண்டும் என்ற கவலை யுண்டு. இந்த வீட்டில் வெள்ளிக்கிழமைக்கும் சண்டைக்கும் அல்வளவு ஏர்வை. அப்போத்தான் விளக்கேற்றி விட்டு அடுப்பில் எதோ காரியமாய் இருந்தாள். திடீர் என்று எதிர் அறையில் ஒரு வீறல். . மோசம் மோசம்!” 'என்ன? என்ன? அவள் கணவன் மாடியிலிருந்து திடு திடுமென இறங்கினான். "நூறு ரூபாய் நோட்டு என் பெட்டியில் வெச்சிருந்தேனே? யார் எடுத்தேள்? உண்மையைச் சொல்விடுங்கோ. யார் எடுத்தேள்?’ ஒரே கர்ஜனை. அம்மா கையைப் பிசைஞ்சுண்டு நிக்கறார். மூஞ்சியே வெடிச்சுடும் போல், தக்காளிப்பழம்போல் சிவந்துபோயிருக்கு. அவள் கணவன் சிரித்தான். என்னம்மா பேத்தறே? யார் எடுக்க முடியும்? கர்ணகுண்டலம் மாதிரி சாவிக் கொத்தோ உன் இடுப்பில் தொங்கிண்டே இருக்கு. எங்கே யாவது ஞாபக மறதியா வெச்சிருப்பே. சரியா தேடிப்பார் 'அடே, எனக்கா ஞாபக மறதி?’ 'யானைக்கும் அடி சறுக்கும் அம்மா. எப்பவுமே நீயே எல்லாம் தெரிஞ்சவளா இருக்க முடியுமா?’ 'நிறுத்துடா உன் பிரசங்கத்தை மறு சாவி போட்டுத் திறந்திருக்கு - எனக்கென்னவோ சொல்ல வந்துட்டான் பெரிசா!' காக்கா கீக்கா கொத்தி-” "ஆமாண்டா! கொத்திண்டு போய்க் கடையிலே கொடுத்து, செட்டியாரே செட்டியாரே! எனக்கு ஒரு வடை கொடுத்து மீதி சில்லரை தாங்கோன்னு கேட்டுதா? இங்கே என்னவோ சூது நடக்கிறது.டா தெரியாத்தனமா மாட்டிண் டுட்டோண்டா!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/127&oldid=1247225" இலிருந்து மீள்விக்கப்பட்டது