பக்கம்:இதழ்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இதழ்கள்

#28 இதழ்கள் அவளுக்கு முதுகுத் தண்டு சில்லென்றது. இதுக்கென்ன அர்த்தம்? அம்மா புழுவாய்த் துடிக்கறார். நின்ன இடத்தில் நிற்காமல் பரவாட்டல் ஆடறார். ஒண்ணா ரெனடா, நூறு ரூபாய்கள். தட்டித் தட்டிச் சுண்டி சுண்டி எண்ணினால் நூறு: அம்மாவுக்குத் தனியாய்ப் பண வேவாதேவி உண்டு. சீட்டுப் பிடிச்சு, தம்பிடிக்குத் தம்பிடி கந்து வட்டி விட்டு ஒண்ணைப் பத்தாக்கி பத்தை நூறாக்கி-அம்மா ஒண்ணு சொல்வதில் சந்தேகமில்லை அவர் இல்லாட்டா இந்த வீடு இல்லை. “இல்லை. இன்னிக்கு இதை நான் சும்மா விடப் போற தில்லை. அடிவரை ஆராயத்தான் போேறன்-” மாடிக்கும் கீழுக்குமாய்த் தேடாத இடமெல்லாம் தேடி பன்றது.தென்னை மரத்தில் புல் புடுங்கியாறது. வீட்டில் இருக் கிற பெட்டிபேழை, டப்பா, பானை எல்லாம் தலை கீழாகக் கொட்டியா:றது. கொண்டாடி உன் சாவியை,’- அவள் பெட்டிக்குச் சாவியேது? அத்துக்கு ஒரு கம்பியை வளைத்து மாட்டியிருந்தாள். அவள் பெட்டியில் என்ன இருக்கு முன் னாலே? ஏதோ ஒரு புடவை. நாலு ரவிக்கை, போன வரு ஷத்துக் காலண்டரிலிருந்து அவளாக ஆசைப்பட்டுக்கத்தரித்து எடுத்த படம், வருஷப் புறப்புக்கு நமஸ்காரம் பண்ணின தற்காக அம்மா கொடுத்த வெள்ளி நாலாணாக்காசு; அவ்வளவுதான், ரூபாயா? அடே அம்மாடியோ! ரூபாய் இருந் தாலும் அவளுக்குச் செலவழிக்கத் தெரியாது. ஆனால் அம்மாவுக்குப் பதைபதைப்பு அடங்கவில்லை. “இங்கே என்னவோ சூது நடந்திருக்கு, சந்தேகமேயில்லை. ஒரு காலணாக் காசு காண, ஒரு சொட்டு ரத்தம் சிந்தறேன், ஒரு பச்சை நோட்டு வெச்ச இடத்திலே காணாம்னா வயிறு எரியறதே- அம்மா சாப்பிடல்லே. ஆனால் அவர் மாத்திரம் இலையைப் போடுன்னு கேட்டு, மூக்கைப் பிடிக்க இழுத்து விட்டு, பேப்பரைத் தூக்கிண்டு வாசல் திண்ணைக்குப் போயிட்டார். புருஷாளே அப்படித்தான். அம்மா கூடத்திலேயே, துரண்மேலே சாஞ்சுண்டு எங்கோ வெறிச்சுந் பார்த்துண்டு ரொம்ப நேரம் ஒண்ணுமே பேசாமே உட்கார்ந்திருந்தார். அவளுக்குத் துரக்கங்கூடி கண்ணிைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/128&oldid=1247226" இலிருந்து மீள்விக்கப்பட்டது