உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இதழ்கள்

j.32 இதழ்கள் திடீர்னு விளக்குப் போட்டாற்போல் புரிஞ்சுது. ஞானோதயம் என்பது இப்படித்தானிருக்குமோ? அன்றிலிருந்து எதையுமே அவர் காதில் வாங்கிக் கொள்வ தில்லை. காதிலே ஒரு சிறு அடைப்பு ஏற்பட்டு விட்டது. யாரோ சொல்றா, எதையோ சொல்றா, யாரையோ சொல்றா. என்ன சொன்னால் எனக்கென்ன? ஆனால் அன்றிலிருந்து அம்மாவும் முன்மாதிரி அவ்வளவு கோயிப்பதில்லை. அவள் அன்று மூர்ச்சையாய் விழுந்ததில் அவர் கொஞ்சம் மிரண்டுட்டார்ணு தோண்றது. ஆமாம்; எது எப்படிப்போனால் என்ன, அதை நினைக்கக் கூட அவ்வளவு அலுப்பாயிருக்கு அதோ அன்னிக்கு-சரியா இன்னியோடே அறுபத்தி மூணு நாளாறது--ரேஸ் மைதானத்திலிருந்து, ஜட்கா வண்டியில் அவரைக் கட்டையாய்ப் போட்டுண்டு வந்து வீட்டில் சேர்த்தாள். குதிரை தோத்துப்போச்சாம். மார்த் துடிப்பு பட்டுனு நின்னு போச்சாம். எவ்வளவு பணம் கட்டி யிருந்தாரோ? யார் யார் பணத்தையெல்லாம் கட்டியிருந் தாரோ? கடைசியில் மனுஷனுக்கு என்ன அவமானமான முடிவு? இப்படியெல்லாம் மனசு எண்ணறதே தவிர, "ஐயோ போயிட்டாரே அதியாயமா என்ற உணர்ச்சி பீறிட்டுக் கொண்டு எழமாட்டேன் என்கிறது. எல்லாம் நியாயமாய்த்தான் போயிருக்கான்னு கூட நெஞ்சு, நெஞ்சுக்கு ரகஸ்யமா உண்மையை வெளியிடறது. கிழவியைப் பார்த்தால்தான் பரிதாபமாயிருக்கு. நல்லதோ கெட்டதோ, ஒரே பிள்ளை. அவன் கைக் கொள்ளியை வாங்கிக்க அவருக்குக் கொடுப்பனையில்லை. ஆனால் அம்மா கூட அதிகம் அழவில்லை. அம்மா தைரியம் ஆசாத்தியம், பழையகாலத்து ராஜபுத்ர ஸ்திரீகளைச் சேர்ந் திருக்க வேண்டும். அதென்னவோ தெரியல்லே, கஷ்டத்தில் ஆவர் நெற்றியில் தேஜஸ் விளையாடற மாதிரி அவளுக்குத் தோனதது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/132&oldid=1247230" இலிருந்து மீள்விக்கப்பட்டது