இதழ்கள்
133
இதழ்கள் 133
இப்போ ஒரு சந்தேகம் தோணறது. என் ஆம்படை யானைப்பற்றி நான் நினைக்கிறப்போ அவர்னு நினைக்கி றேனா, அவன்னு நினைக்கிறேனா, அதுன்னுநினைக்கிறேனா? எதுவாயிருந்தால் என்ன? இனிமேல் எது எப்படிப் போனால் என்ன? செத்தமாட்டுமேலே எது ஏறினால் என்ன? என்னமோ உயிரோடு இருக்கிற மாதிரி தோனறதே யொழிய நிஜமாகவே நான் உயிரோடிருக்கேனோ இல்லியோ? இதை எனக்கு நிச்சயமாச் சொல்ல யாரிருக்கா? "நான் இருக்கிறேன்-!” அவள் திடுக்கிட்டுப்போனாள். அது அம்மா குரல் இல்லை. "யார் அங்கே?' எழுந்து நின்றாள். நெற்றியில் வேர்வை முத்திட்டது. ... " 'யார் அங்கே? யாருமில்லை. ஸ்ன்னமாய் மூச்சுப் போல் குளிர்ந்த காற்று கிளம்பி முகத்து வேர்வையை ஒற்றி யது. அவளுக்குப் புரிந்தது. - 'அம்மா! அம்மா' கதவைப் படீரென்று திறந்து கொண்டே உள்ளே ஓடி, இருளில் அவர்மேல் தடுக்கி விழுந் தாள். அவர் காலைக் கெட்டியாய் மார்போடு தழுவிக் கொண்டாள். "அம்மா, அம்மா, நான் உண்டாயிருக்கேம்மா!-' அம்மா உடல் பூமிபோல் கிடுகிடென்று ஆடிற்று. மரு மகளைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள். இருளில் அவள் முகத்தின்மேல் இரு இதழ்கள் உதிர்ந்தன.