உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இதழ்கள்

i56 இதழ்கள் இருப்பதைக் காண்கிறேன். 篱 X 翼 X சிவப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை, நீலம், எல்லா வர்ணங்களும் மிஸ் ஹெர்மாயினின் பூச் செண்டில் அடங்கி யிருக்கின்றன. செண்டில் என் முகத்தைப் புதைத்துக் கொண்டிருக்கிறேன். என் கண்ணிர், பூக்களின்மேல், பனித் துளிகள்போல் நிற்கின்றன. உள் பிரக்ளுையெனும் ஒரே இதழில் படுத்து மிதக்கும் வெள்ளத்தில், செண்டும் என்னை விட்டுப் பிரிந்து தன் யானைத் தலையை ஆட்டிக்கொண்டு மிதத்து செல்கிறது. என்னிடம் அது இருக்கிறது; கூடவே இல்லவும் இல்லை. உடலினின்று உயிரின் பிரிவும் இதுதானோ? 翼 X X X 、 இப்பொழுது நான் கட்டிலில் படுத்திருக்கும் நிலையில் ஜன்னலின் வழியாகப் பக்கத்து வீட்டின் அகன்ற நடு முற்றம் தெரிகிறது. அதன் எதிர்த் தாழ்வாரத்தை ஒட்டினாற்போ லிருக்கும் சமையலறையின் இருட்டிலிருந்து அடுப்புத் தி தெரிகிறது. இருந்தாற் போலிருந்து எங்கள் விட்டுச் சமையலறையைக் காண்கிறேன். அடுப்பெதிரில் அம்மா உட்கார்ந்திருக்கிறாள். குழந்தை யாய் அவள் மடியில் நான் படுத்திருக்கிறேன். என் முகத்தை மூடிய மேலாக்கைத் தள்ளிவிட்டுத் திரும்பி அடுப்பிலாடுந் தீயை வியப்புடன் நோக்குகிறேன். என் உதட்டோரத்தில் பால் வழிகின்றது. அடுப்பிலிருந்து அக்கினி தன் எண்ணிறந்த கைகளை நீட்டி என்னை அழைக்கிறது. நீலமும் சிவப்பும் அரக்குமாய்ச் சாயங்கள் தீயின் விளிம்பிலும் நடுவிலுமாய்ப் பிறந்து வழிந்து ஒன்றோடொன்று இழைந்து, விதவிதமான முகங்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/136&oldid=1247234" இலிருந்து மீள்விக்கப்பட்டது