பக்கம்:இதழ்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இதழ்கள்

#38 இதழ்கள் அடுப்பு வீணாய்ப் போகிறது. குடியேண்டா குடி, குண்டு பெருச்சாளி, கொழுக்கட்டை, கஷ்கு முஷ்கு!” மறுபடியும் சமையலறையில்தான் இருக்கிறேன். மறுபடி பும் அம்மா மடியில் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக் கிறான். -

  • தம்பி!” பின்னால் கைகட்டிக் கொண்டு அப்பா உள்ளே வருகிறார்.

என்ன சொல்கிறான் இந்த நூற்றுக் கிழவன்? .திருப்பித் திருப்பி என்ன அவனுக்கு? இது வரைக்கும் மூணு கிண்டி காப்பி, நாலு பிஸ்கோத்து, ஒரு முறுக்கு ஆச்சு. நீங்கள் ரண்பித்துக்கு வாங்கிண்டு வந்தேளே மொக்கான் மோக்கானாய் அந்த மூணு தக்காளிலே ரெண்டு குளோஸ்! கண் மூடறவரைக்கும் வாய் மூடாப் பட்டினி. இன்னும் கம்மு எப்டோ ஆகும்னு அரிச்செடுத்துண்டிருக்கான். பாருங்கோ குறவன் மாதிரி உறுத்து முழித்துக் கொண்டிருக் கிறதை' "குழந்தையை ஒண்னும் சொல்லாதே. எப்படி இளைச் சுட்டான்! மரப்பாச்சியா ஆகிவிட்டான். வாடா கண்ணா. நாம் ஓ போகலாம்!” நான் அப்பா கையை உதறுகிறேன். "போப்பா! உன்னை அடிப்பேன்!” “ஊம்! என்ன சொன்னே? அம்மா என்னை முறைக் கிறாள். நான் உடனே என்னைத் திருத்திக் கொள்கிறேன். போங்கோப்பா! அடிப்டேன் உங்களை!” அப்பா சிரிக் கிறார்: "ஓ! அம்மா இப்படித்தான் சொல்லச் சொன்னாளா?” அம்மா பல்லைக் கடித்துக்கொண்டு என்மேல் கை ஓங்கு கிறாள். “சரி சரி, பூர்மதி கொஞ்சம் சமத்தாயிரு. அவனுக்குப் பசி. ஆனவரைக்கும் போட்டுடேன்.” 'சனியனே, உக்காரு. உனக்கு அப்பா சிபாரிசு வேறே வந்துடுத்தோன்னோ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/138&oldid=1247236" இலிருந்து மீள்விக்கப்பட்டது