பக்கம்:இதழ்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இதழ்கள்

இதழ்கள் சுருள்போல் திகில் அடி வயிற்றிலிருந்து விசிறிக்கொண்டு கிளம்பியதும் குருவுக்கு முகம் சாம்பலாய் வெளுத்தது. 'நீங்கள் ஆபீஸுக்குப் போனதும் எச்சில்கூட இடல்லே’ காரியத்தை அப்படியே விட்டுவிட்டு முதுகுவலிக்கு உடம்பைப் போட்டுப் பிரட்டிக்கலாம்னு ஊஞ்சலில் சாஞ்சதுதான் தெரியும். உச்சி வெய்யில் ஒட்டு சந்திலிருந்து கண்ணைச் சுட்டப்போது தான் முழிச்சுண்டேன். கண்ணைக் கசக்கிண்டு பார்த்தால் எல்லாம் போட்டது போட்டபடி வீடு ஜோ'ன்னு கிடக்கு. வாசல் கதவைத் திறந்துண்டு, குடித்தனக்காரப் பாட்டி பக்கத்தாத்துக்கு பேசப் போயிட்டா. பிருகா பிருகான்னா எங்கேயிருக்கா? எனக்குத் தெரிஞ்ச அண்டையாம் எதிராளாம் எல்லாம் தேடியாச்சு, உன் பெண் இன்னிக் காலையிலிருந்தே கண்ணுலே படலையே அம்மான்னு எல்லாரும் கைவிரிச்சுட்டா. நான் கைக் குழந்தையை பாட்டிகிட்ட கொடுத்துரட்டு-எனக்கு ஒண்ணுந் தோணல்லே, அப்படியே ஒடி வந்துட்டேன் திடீரென சின்னா ஜன்னி கண்டவளாகிவிட்டாள். அவன் கையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள். ஐயோ, என் குழந்தைக்கு என்னவாவது நேர்ந்திருக்குமோ என் வயிற்றை சங்கடம் பண்றதே.என் குழந்தையை எனக்குத் தேடிக் கொடுங்களேன்-- குரு அவள் தோளையனைத்துக் கொண்டான். அவள் குழந்தையாய்த்தானிருந்தாள். குழந்தைக்குக் குழந்தை! 'சின்னா, பயப்படாதே! இப்போ எல்லாம் பழைய நாட்கள் மாதிரியில்லே. போலீஸ், ரேடியோ, தினசரிப் பத்திரிகைகள், விளம்பரங்கள் இன்னும் என்னென்னவோ வழிகள் எல்லாம் இருக்கின்றன. வா வீட்டுக்குப் போவோம்." அவன் அவளை நடத்திச் செல்ல, அவன் நடந்தான். எல்லாத்துக்கும் வழியிருக்கலாம். ஆனால், என் குழந் தையை உசிரோடு காண்பேனோ? ‘என்னடி பேத்தறே? திகிலின் சீற்றத்தில் அவளை அறையலாம் என்று இருந்தது. நடு வழியில் சட்டென நின்றான். பிருகா கழுத்தில் ஏதாவது போட்டிருக்கா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/14&oldid=1247293" இலிருந்து மீள்விக்கப்பட்டது