பக்கம்:இதழ்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

141

இதழ்கள் 143

சிந்தனையின் கீதம். கூடத்தில் விளையாடிக் கொண்டிருந்த நான் கனககாரிய மாய் வந்து-ஏன், என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை-வெடுக்கெனக் குழந்தையின் தோளைக் கடித்து விடுகிறேன். குழந்தை வீல் என அலறுகிறது. 'அட கொலைகாரா!’ ஒரு கையால் குழந்தையை வாரிக்கொண்டு, அக்ம்ச் என்னை முதுகில் இரண்டு அறை அறைகிறாள். நான் அழுகிறேன். அவளுக்கு அப்பவும் ஆத்திரம் தீரவில்லை, குழந்தையைத் துரக்கியபடியே, என்னை துரத்தித் துரத்தி அடிக்கிறாள். இந்த அமர்க்களம் கேட்டு அப்பா வாசலறையி லிருந்து வருகிறார். "என்ன பூரீமதி? 'குழந்தையை எப்படிக் கடிச்சுட்டான் பாருங்கோ, ரத்தங்கூடப் பிடுங்கிண்டுடுத்து.' அம்மா அழுகிறாள். எனக்கும் அழுகை வருகிறது. அப்பா என்னை வெறித்துப் பார்க்கிறார். பயமாயிருக்கிறது. “ஏண்டா இப்படிப் பண்ணலாமா?” எனக்குப் பயமாயிருக்கிறது. ஆனால் வாயிலிருந்து புறப் பட்ட வார்த்தைகள் அப்படித்தா ன் பண்ணனும்” என: அமைகின்றன. இது எந்த ஜாலத்தைச் சேர்த்தது? அப்பாவுக்குக் கோப நரம்பு நடு நெற்றியில் புடைத்துக் கிளை பிரிந்து பட் பட் என அடித்துக் கொள்கிறது. 'என்னோடே பேசாதே போ!' வேகமாய் வாசலறைக்குப் போகிறார். அம்மா குழந்தைக்கு மருந்து கேட்கப் பக்கத்து வீட்டும் பாட்டியிடம் போய்விடுகிறாள். கூடத்தில் நான் மாத்திரம் தனியாய் உட்கார்த்திகுக் கிறேன். வீடு நிசப்தமாகிவிடுகிறது. குழிாங் ஜலம் ட்ரம்'யில் உங், உங், டங்' என்று விழு கிறது. திடீரென உலகத்தின் ஒண்டிப் பிறவியாய், எனக்கு நானே வேற்று மனிதனாய் என்னைக் காண்கையில் எனக்குத் திகிலாயிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/141&oldid=1247239" இலிருந்து மீள்விக்கப்பட்டது