144
இதழ்கள்
144 இதழ்கள் பாப்பா தும்முகிறாள். நான் தீர்க்காயுஸ் என்கிறேன். இன்னொரு தும்மல். 'சதாயுஸ்,’’ அர்த்தம் தெரியாமலே அம்மாவைக் காப்பியடிக்கிறேன். X X X ஆனால் வாரத்துக்கு வாரம் திருஷ்டி கழித்தும், தும்ம அக்குத் தும்மல் வாழ்த்தியும், பாப்பா தீர்க்காயுஸ்ாயில்லை, ஒரு நாள் அவளுக்கு மார்பில் சளி தாக்கிவிட்டது. விலாவில் சுவாசம் கொல்லன் துருத்தி போல் அழுந்தி வணங்குகிறது. கொர்-கொர்’ எனும் அதன் சப்தம் ஆெண்கலத்தாலான சம்மட்டிபோல் இரவு முழுதும் எங்களை மண்டையிலடித்துக் கொண்டிருந்தது. பொலபொலவெனப் பொழுது புலரும் வேளையில் சப்தம் அடங்கிற்று. - அந்த அதிகாலை நேரத்தில், அவள் வெளேரென்று, உதிர்ந்த பூவைப்யோல் துவண்டு கிடந்தாள், - 翼 笼 翼 வின் தம்பி மத மதவென்று வளர்கிறான். அவன் பக்கத் தில் நான் ஓணான் மாதிரியிருக்கிறேன். . நடையில், இவன் எடுத்து வைக்கும் ஒரு அடிக்கு நான் இரண்டு அடியாய் அவன் பக்கத்தில் மூச்சிரைக்க ஒடவேண்டி யிலக்கிறது. அண்ணா மேல் அவனுக்கு உயிர். ஏனோ? ‘அண்ணா, அண்ணா வெனப் பேச்சுக்கு முன்னால் பின் னால், நடுவில், நாலு அண்ணா சொல்லி விடுவான். குஞ்சைச் சிறகால் அணைக்கும் கோழி போல,என்னைத் தன் அன்பால், வளர்ச்சியால், வலிமையால், என்மேல் வெய்யில் படாமல் போர்த்திக் கொண்டிருந்தான்.