146
இதழ்கள்
#46 இதழ்கள் திடீரென அம்பிக்கு வெறி வந்துவிட்டது. மேட்டிலும் பள்ளத்திலும் வண்டியை அடித்துக்கொண்டு போகும் அதிர்ச்சியில் எனக்குக் குடலே வெளியில் கொட்டிவிடும்போல் துரக்கிப் போடுகிறது. 'டேய் டேய்!! நான் கத்தக் கத்த அவன் வேகம் அதிகரிக்கிறது. அவன் வெறி என்னுள்ளும் பாய்கையில் உயிர்ப் பட்சி எள்னைவிட்டுக் குத்திவிடும்போல் உடலின் பரபரப்பு தாங்க முடியவில்லை. ஸைகிள், ஜலம் வறண்ட ஒரு மடுவில் அம்பு வேகத்தில் இறங்கி ஏறிற்று. அடி வயிறு சில்லெனச் சுருண்டது. அப்பொழுதுதான் கண்டேன், மடுவின் கனரயிலிருந்து, அகன்று உயர்ந்த மொத்தாகாரமானதோர் உருவம், தலையை விசித்துப் பேயாட்டம் ஆடியபடி முன் சாய்ந்து எங்களை நோக்கி விரைவதை, 'மரம்...மரம்...மர-’ வண்டி, மோதிய வேகத்தில்: எறிந்த கல் போல் நான் மேலெழும்பிக் காற்றில் பறந்து போய் மரத்தின் கிளைகளி னிடையில் தொத்திக் கொண்டேன். மல்லாந்த பூச்சிபோல், என் கை கால்கள் நெளிந்தன. ஒருவாறாய் விடுவித்துக் கொண்டு கீழே குதித்தேன். தம்பி வெட்டிய மரம்போல் கீழே சாய்ந்து கிடந்தான். மார்பு திமில்போல் உயர்ந்தது, கால் கைகள் அகல விழுந்து கிடந்தன, மூக்கிலும் வாயிலும் காதுகளிலுமிருந்து ரத்த நூல்கள் வழிந்து கொண்டிருந்தன. 'சத்துரு!” என் காட்டுக்குரல் கிறீச்'சிட்டுக் கொண்டே மேலே போய் உச்சத்தில் உடைந்து ஒன்பதாயிரம் சுக்கல்களாய். முன் இருளில் என்னைச் சுற்றிலும் தெறித்தது. அவனுக்கு வலிப்பதற்குக்கூட நேரம் இருந்திருக்காது. X X X ஆறு மாதங்களுக்கு எனக்குத் தோள்கள் ஊமையாய் வலித்துக் கொண்டிருந்தன. எந்த சிகிச்சைக்கும் பிடிபட வில்லை,