இதழ்கள்
147
இதழ்கள் - 447
என்ன் இருந்தாலும் உடன் பிறப்பில்லையா? நாளாக ஆகப் பாம்பு படத்தைக் கீழே போடுவதுபோல் தானே மறைந்தது. هاء هم منه تقرية بيت TFTة يُقيَ மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒரு தை வருகிறது. நகரலையில் ஒரு சின்ன ரயில்வே ஸ்.ே சுவிேட்டுக்கொண்டு நிற்கும் ஒரு வண்டித் த்ெ லிருந்து ஒரு சிறு கூட்டம் பெட்டியும் படுக்கையுமாய், இழிகின்றது. எங்களை வரவேற்பதற்குப் பெண் வீட்டார் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வரவேணும் வரவேணும் பிரயாணம் செளகரியமா யிருந்ததா? உட்கார, படுக்க தூங்க இடம் கிடைத்ததா? ”ஆகா, எல்லாம் ரொம்ப செளகரியம் போங்கோ.” உண்மையில் நிற்கக்கூட இடமில்லை! ஆனால், இம்மாதிரி ஒட்டைக் கேள்விகள், ஒட்டைக் கேள்விகளுக்கு ஒட்டைப் பதில்கள், பொய்ப் பரிமாறல் இல்லாத கல்யாணமே உலகில் கிடையாதோ? எங்களுக்காக இரண்டு கார்கள் காத்திருக்கின்றன. ஊருக்குள் நுழைகையில், வீட்டு வாசற்குறடுகளில்: ஆண்களும், பெண்களும் நின்று எங்களை வேடிக்கை பார்க்கிறார்கள். அப்பொழுது, தெருவின் திருப்பத்தில், தாழ்ந்த வனளவில், வண்டி யிறங்குகையில், வாசலுக்கெதிரில், பிரும் மாண்டமான ஒரு தாமரைப் பூக் கோலத்தின் நடுவில், ஒரு பெண் நின்று கொண்டு கோலத்தைச் செப்பனிட்டுக் கொண்டிருக்கிறாள். சப்தம் கேட்டு முகத்தில் வழியும் கூந் தலைத் தோள்பட்டையால் தன்னிக்கொண்டு நிமிர்கிறாள். அவள் நிமிரும் அதே சமயத்தில், எங்கள் கண்கள் சந்திக்கின்றன. சூரியனின் பொற்கதிர் அவள் முகத்தில் படுகையில், அவள் விழிகளில் நீலம் பளபளக்கின்றது. என்னைப் பார்த்துப் புன்னகை புரிகிறாள்.