இதழ்கள்
153
இதழ்கள் i53
ஒரு மூலையில் ஒரு விதமான அவமானம் ஒளிந்து கொண்டு ஊமையாய் உறுத்துகிறது. நான் இப்பொழுது உயிரோடிருக்கிறேனா, அல்லது ஏற் கெனவே இறந்துவிட்டேனா? அல்லது உயிரின் பழக்கத்தால் உயிரோடிருக்கிறதாய்ப் பாவித்துக் கொண்டு, அந்த உயிர் நிழலாடலில் உடல் இன்னும் செத்துக் கொண்டேயிருக் கிறதா? இந் நிலையில் நான் வேண்டுவது என்ன? பாகியா? பாகியின் வயிற்றில் என் எண்ணத்தின் வேட்கைக்கு மாற்றாய் வளரும் என் குழந்தையா? அல்லது பிரும்மாண்டமான தாமரைக்கோலத்தின் நடுவில் நின்றபடி, வழிந்த கூந்தலைத் தோள்பட்டையால் தள்ளிக் கொண்டு நிமிர்ந்த முகத்தில் காலை வேளையின் பொற்கதிர் பட்டு, நீலம் தெறிக்கும் கண்கள் என் கண்களைச் சந்தித்ததும் ஒளி வீசிக் கொண்டு படர்ந்த புன்னகையா? X 冷 烹 ஒரு நாள் மாலை என் அறைக் கெதிரே இருக்கும் புற்ற ரைக்கு, மிஸ் ஹெர்மாயின் மேரிகோல்டு, என்னைச் சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டு சென்றாள். அவள் கன்னத்தைத் தொடவேண்டுமென எனக்குத் திடீரென ஆசை பிறந்தது. விபரீத நோக்கமல்ல; அவன் கன்னத்தின் வழவழப்புக்காக. திடீரென்று மிஸ் ஹெர்மாயின், மிஸ்டர் ராம், நீங்கள் ரொம்பவும் தைரியசாலி!” என்றாள். ஏன்?" "ஏனா? மலைபோல வந்திருக்கும் வியாதியின் ஆபத்தி லிருந்து மீண்டு விட்டீர்கள். நீங்கள் இங்கு வந்தபோது உங்கள் மேல் எங்களுக்கு நம்பிக்கையில்லை.” e sax}** ਾਂ, இதுவரை இருந்தது பெரிதில்லை. இனிமேல் தான்iஇன்னும் தைரியமா யிருக்க வேண்டும்.” இ-10