உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

155

இதழ்கள் 155

அவன் புத்திசாலி என்றே நினைக்கிறேன். பதில் பேச வில்லை. என் முகத்தைப் பார்க்காதது போல் அந்தண்டை திரும்பிக் கொண்டான். வண்டி தகர்ந்தது ماه محح ک 冷 翼 X بهتمام வருகிற விருடமும் வழக்கம் போல், இதே தினத்தன்று காலை மிஸ் ஹெர்மாயின் யானைத் தலையளவு பூச் செண்டு. டன் உள்ளே நுழைகிறாள். 'ஹல்லோ மிஸ்டர் ராம்! குட்மார்னிங்! நீங்கள் சிரஞ் சீவியாயிருக்க வேண்டும். இந் தன்னாள் திரும்பத்திரும்ப வர வேண்டும்!” அவள் வார்த்தைகள் தடைபடுகின்றன. தான் எழுந்திருக்கவில்லை. என்னுடைய கண்கள் மூடியிருக் கின்றன, என்னிடம் வந்து தாதுவைப் பிடித்து இதயத்தில் செவி சாய்த்துக் கேட்கிறாள். என் கை துவண்டு விழுகிறது. என் கைகளை யெடுத்து மார்மேல் சேர்த்து வைத்துச் சிலுவையின் குறியில் தன் தோள்கனையும் நெற்றியையும் தொட்டுக் கொள்கிறாள். அவள் உதடுகள் அசைகின்றன. போர்வையை) என் தலைமேல் இழுத்து விட்டுப் பூச் செண்டை என் பக்கத்தில் வைத்துவிட்டு, அடிமேல் அடி வைத்து வெளியே செல்கிறாள். நான் உள் பிரக்ஞையின் ஒரே இதழில், உயிர் வெள்ளத் தில் மிதந்து செல்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/155&oldid=1247253" இலிருந்து மீள்விக்கப்பட்டது