பக்கம்:இதழ்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இதழ்கள்

8. இதழ்கள் பக்கத்தில் குறட்டை விட்டுத் துங்கிக் கொண்டிருந்த கணவனை உஷை அவசரமாய்த் தட்டி எழுப்பினாள். குரு கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான். "என்னது?” "நான் உண்டாயிருக்கிறேன்.” சட்டெணத் தூக்கம் கவைத்த குரு அவளை உற்று நோக்கி ஜான். கேனாத கேள்வியில் அவன் புருவங்கள் @್ಗೆ பின்வாங்கின. அவள் மீண்டும் "நான் உண்டாயிருக்கிறேன் என்றாள். அவன் கண்களில் புன்னகையின் அரும்பொளி நிழல் கட்டிற்று. 'ஓ' வெரி குட் என்றானாம் வெள்ளைக்காரன்; அதுவே சரி என்றானாம் தமிழன்.” “இல்லை, தான் உண்டாயிருக்கிறேன்.” அவளை ஒரு கணம் சந்தித்துவிட்டு ஏதோ சொல்ல வாயெடுத்தவன் சட்டென மூடிக்கொண்டான். சரி, காலையில் பேசிக்கொள்ளலாம்; இப்போது தூங்க லாம். நாளைக்கு ஆபீஸ் உண்டு; தெரியுமோ இல்லையோ?” அவன் திரும்பிப் படுத்துவிட்டான். ஆனால் அவளுக்குத் துரக்கம் வரவில்லை. முழங்காலைக் கட்டிக்கொண்டு வெகு தேரம் உட்கார்த்திருந்தாள். "நான் உண்டாயிருக்கிறேன்.” அவள் சொன்னது அவளுக்கே வியப்பாக இருந்தது. அதுவும் அடித்து அடித்து மூன்று தடவை பொறித்த குஞ்சுகள் பறந்துவிட்டபின், கூட்டின் அடைசலிலிருந்து முழுவளர்ச்சியில் சிறகுகளை விரித்துக்கொண்டு எழும் ஒரு பட்சிபோல் அவ்வளவு தீர்மானமாய் அதற்கே சொந்தமாய் அத்த வாக்கியம் அவனை மீதி அவனிடமிருத்து பிரித்து..,.,..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/156&oldid=1247254" இலிருந்து மீள்விக்கப்பட்டது