பக்கம்:இதழ்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

157

இதழ்கள் 157

குரு பல்லை விளக்கிக் கொண்டு, மூகத்து ஈரத்தை வேட்டிக் கொடுக்கில் துடைத்தபடி சமையலறையுள் நுழைந்தான். கலந்த காபியை எதிரே வைத்துக் கொண்டு. உஷை சுவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். காபிமேல் வெள்ளை படர்ந்து கொண்டிருந்தது. குரு குனிந்து அவன் முகத்தெதிரே விரலைச் சுண்டினான். அவள் முகம் அவன் பக்கம் திரும்பியது. ஆனால் பார்வையில் அடையானம் இல்லை. 'அந்தச் சங்கை இதற்கு முன்னால் எங்கேயானது பார்த்திருக்கிறேனோ?” எதிரே உட்கார்ந்தான். “எது சங்கு? 'வெள்ளை வெனோரென வழுவழுப்பாய். விகிது பெருத்து உடனே அவசரமாய் நுனி குறுகி......' அவள் விவரிக்கும் உருவில், அவள் விரல்கள் அவளையும் அறியாமல் குவிந்து துடித்தன. துளி சிறுத்து அர்த்தக் நிறைந்த நீண்ட விரல்கள். அவன் காத்திருந்தான். நேற்றிரவு நான் ஒரு கனாக் கண்டேன். சமுத்திரக் கரைமேல் ஜல ஒரமாய் நடந்து போகிறேன்! போய்க் கொண்டே இருக்கிறேன். அலைகள் கரைமேல் அறைந்து மீள்கையில் மையிருளில் துரைக் கொப்புளங்கள் ஆாr இறைத்த நட்சத்திரங்கள் போல், வெண்ணிலத்தில் கண் சிமிட்டுகின்றன. அப்போது கண்ணைப் பறிக்கும் வெண் மையில் பெரிதாய்க் காலடியில் ஏதோ பளபளத்தது. என்ன என்று குனிந்து கையில் எடுத்தும், அது ஒரு வெண்சங்கெனக் கண்டேன்.” கனவு மயக்கத்தில் அவள் கண்கள் மங்கின; பேச்சு கொழ கொழத்தது. அரை யோசனையும் குறை வாக்கியமுமாய் அவள் தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள். அவன் மனம் பரிதவித்தது. குழந்தை மழலையில் குழறிக் கொண்டு, இன் சப்தங்களுடன் தானே விளையாடிக் கொள்வதுபோல் அவன் பார்க்க நிராதரவாய், பரிதாபமாய் இருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/157&oldid=1247255" இலிருந்து மீள்விக்கப்பட்டது