உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இதழ்கள்

16 இதழ்கள் ஆன்ால், சாதாரணமாய் வழக்கில், இட்ட பெயர் பிரஹதாவை ஒட்டி, அவள் சுறுசுறுப்பையும் குறிப்பதாய் பிருகாவே நிலைத்தது. பிருகாவுக்கு வாய் ஒரு நிமிஷம் சும்மாயிருக்க முடியாது. அதில் எதையாவது போட்டு அசைத்துக் கொண்டிராத வேளைக்கு ஏதாவது பேசியாகணும். இன்று காலை எழுந்ததும் வழக்கம்போல் ஏதோ ஆரம் பித்தாள்-உன் மேலே எனக்கு ஆசையாயிருக்கம்மாஎன்று அம்மா கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்கினாள். ‘விடு நேரமாச்சு, குளிக்கப் போகணும்.” 'அம்மா உன்னைப் படுத்தமாட்டேம்மாஅதான் ஏதுடாது மானம் மப்பு போட்டிண்டிருக்கேன்னு பார்த்தேன்-என்னை விடறையா? 'சாப்பிடறப்போ வெறி பிடிச்சு அழமாட்டேம்மாஆகட்டும்; அப்போன்னா தெரியப் போறது. இன்னும் ஆலை நீருக்கே வழியில்லை. அடுப்பிலே பூனைக் குட்டி துரங்குகிறது. மணியோ ஒடறது. உங்கப்பா கடியாரத்தை என்ன திருசமம் பண்ணியிருக்காரோ? பிருகா விடறையா? இல்லை கொடுக்கறதை வாங்கிண்டுதான் விடுவையா? பிருகாவுக்குத் திடீரென அம்மா கழுத்துச் சங்கிலிமேல் கவனம் நழுவிற்று, அதை நெருடினாள். அம்மா...இது பொய்யாமே? சின்னா குளியை மறந்தாள். அரவம் கேட்ட விலங்கு போல் அவள் மனம் உஷாராயிற்று.

  • யார் சொன்னா?” "பட்டு மாமி சொன்னாள். நேத்திக்கு மாமிக்கு மாமா புதுஸ்ஸா கடையிலிருந்து உன்னுது மாதிரியே வாங்கிண்டு வந்தா, பளபளன்னுது. என் கழுத்துலேகூடப் போட்டுப் பார்த்தா. எனக்கு ஆசையாயிருந்ததம்மா. நல்லாயிருக்கு மாமின்னேன், ஏன் உங்கம்மாது மாதிரின்னு நினைச்சை யா'ன்னு மாமி கண்ணைச் சிமிட்டினா. எல்லாரும் சிசிச்சா.”

"ஏன் மாமி, எங்கம்மா சங்கிலிக்கு என்ன? கேட்டேன். "உங்கம்மா சங்கிலி பொப், டுப் அளிப்ஸ்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/16&oldid=1247295" இலிருந்து மீள்விக்கப்பட்டது