பக்கம்:இதழ்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இதழ்கள்

ičij இதழ்கள் குரு பத்திரிகையைக் கையில் வைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் மனம் படிப்பில் இல்லை. ஜன்னல் சட்டத்தின் மேல் ஒரு குருவி பயம் இல்லாமல் வந்து உட்கார்ந்து, ட்விக்’, ‘ட்வீக் என்றது. இன்று மெய்யாகவே வேளை ரம்மியமாக இருந்தது. இன்று காரியா லயத்துக்குப் போகும் நாள் அல்ல. இப்படியே நாற்காலியில் சாய்ந்தபடி வெளியே காற்றில் அசைந்தாடும் மாமரத்தில் எத்தனை காய்கள் எந்த எந்தப் பக்குவத்தில் பழுத்துக்கொண் டிருக்கின்றன. இந்த மரத்தில் மொத்தம் எத்தனை இலைகள் என்று கண்ணால் ஒவ்வொன்றாக எண்ணும் நாள். வானம், காயக் கட்டிய பிரம்மாண்டமான நீலப் புடைவைபோல் காற்றில் படபடத்தது. தூய பனி வெள்ளை மேகத் திட்டியில், ஒரு கிளிக் கூட்டம் பறந்து செல்கிறது. பொன் வெயிவில் அவற்றின் பச்சை, கறை கறையாய்க் கண்ணைப் பறிக்கிறது. உஷை கட்டிலில் உட்கார்ந்திருக்கிறாள். நிலைக் கண்ணாடியில் தெரிகிறாள். எங்கோ பார்த்துக் கொண்டு. அது என்ன யோசனையோ? கண்ணாடியில் அவள் கண்கள் அவன் பார்வையைச் சந்திக்கின்றன. எப்படியும், உஷைக்குக் கண்கள் அழகுதான். மைச்சிமிழைத் திறந்து வைத்தாற் போல், சில சமயங்கனில், கண்களின் வெள்ளையை அடைத்த பெரிய கருவிழிகள். விழிகளின் எடுப்பிற்கு மூக்கு இன்னும் கொஞ்சம் கூட இருந்திருக்கலாம். அட இந்தக் கூந்தல் இப்படிப்ா நரைத்துப் போக வேண் டும்? அதை நினைத்துக் கொண்டால்தான் விசனமாக இருக் கிறது. இருவரும் சேர்ந்து வெளியில் போகச் சில சமயங்களில் வெட்கமாய்க் கூட இருக்கிறது. அவள் பொருட்டேனும் எனக்கு மயிர் நரைக்கக் கூடாதா? அல்லது மண்டையில் சிறு வழுக்கை விழக்கூடாதா? இருவருக்கும் பாந்தம் என்பது பின் எப்படி ஏற்படுவது?” “உஷா, உஷா, காபியை இப்படித் தொட்டி தொட்டி யாய்க் குடிக்காதேயேன். அதனால்தான் மயிர் இப்படி நரைத்துப் போகிறது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/160&oldid=1247258" இலிருந்து மீள்விக்கப்பட்டது