பக்கம்:இதழ்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இதழ்கள்

if| இதழ்கள் அவன் கழுத்தைச் சுற்றி அவள் கைகள் இறுகின. தெற்றிமேல் நெற்றி அழுத்திற்று.

  • -ப்பா எவ்வளவு அழகாகச் சொல்கிறீர்கள்? நீங்கள் சொல்வதெல்லாம் எனக்கு எவ்வளவு பெருமையாக இருக் கிறது, தெரியுமா? ஆனால் நீங்கள் சொல்வது அத்தனையும் சரி. என் பெற்றோருக்கு நான் பிறந்த பின்புதான் விடிந்த தாம். நான் பிறந்த மூன்றாம் நாள் அப்பாவுக்குத்திடீரென்று உத்தியோகம் உயர்ந்ததாம். எதிர்பாராத இடத்திலிருந்து சொத்துக் கிடைத்-'

வெகு வேகமாய் ஒரு பெரிய கருவண்டு வெளியிலிருந்து பறந்து வந்து கண்ணாடி மேல் மோதி. சட்டெனக் காலடியில் விழுந்து கவிழ்ந்தது. புரண்டு கவிழ முடியாமல் அதன் கால்கள் நெளிந்தன. குரு அதன்மேல் துண்டைப் போட்டு எடுத்து ஜன்னலண்டை போய்த் துண்டை உதறினான். வண்டு விர்ரென்று பறந்து சென்றது. அதன் கதியைக் கண் மறையும் வரை கவனித்துவிட்டுக் குரு திரும்பினான், உஷை கையில் கன்னத்தை ஊன்றிச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். குரு பெருமூச்செறிந்தான். அவையெல்லாம் அந்த நாட்கள். உலகம் எங்கே விடிவேளையிலேயே நிற்கிறது! வெயில்தான் ஏறிக் கொண்டே இருக்கிறதே! உஷை! இரவின் இருளைக் கிழித்துக் கொண்டு புறப்படும் உதயத் தின் தேவதை, என்ன தைரியமான பெயர்! ஆனால் இந்த உஷையின் பெயருக்கும் அவளுடைய தன் மைக்கும் துருவ தூரம். உஷையின் எதிரில் ஒர் எலி ஒடி விடக்கூடாது. ஆமாம்! கரப்புப் பறக்க கூடாது அவள் துள்ளித் துடித்து அவன்மேல் விழுந்து விடுவாள். அம்மாதிரி அவள் பயங்களை அவன் இன்ப நேரங்களாய் வரவேற்றான். எதற்கெடுத்தாலும் சந்தேகம். 'இன்றைக்குக் காபி அடுப்புப் பற்ற வைக்கக் கரிப்பெட்டியில் கைவிட்டேன். என்னவோ சுருக்கென்றது. அப்போது முதற்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/164&oldid=1247262" இலிருந்து மீள்விக்கப்பட்டது