பக்கம்:இதழ்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

165

இதழ்கள் 蚤

தலையைச் சுற்றுகிதாப்பேல்ே இருக்கிறது' என்று அவள் ஆரம்பிப்பாள். 'கரிப் பெட்டியில் ஓர் ஆணி நீட்டிக் கொண்டிருக்கிறது. எனக்குத் தெரியும். அதைப் பிடுங்கி எடுக்க வேண்டுகிமன்று க்த்தியை நேற்றையிலிருந்து தேடிக்கொண்டிருக்கிறேன்’ என்று அம்மா சொன்னால் கேட்க மாட்டாள். உடனே அத்தனை கரியையும் கீழே கொட்டி, பெட்டியைக் கவிழ்த்துத் தட்டிக்கொட்டியும் சமாதானம் அடையமாட்டாள். “என்னைக் கடித்தது இன்னமும் அங்கேயே உட்கார்த்து கொண்டிருக்குமா நாம் அதை அடிக்கவில்லையே என்று காத்துக்கொண்டு!” அம்மா அப்படி ஒன்றும் சாந்தத்திற்குப் பேரெடுத்தவள் அல்ல. எரிச்சல் வந்துவிடும். உஷையும் தொன தொன வென்று சொன்னதையே சொல்லிக்கொண்டு பொதுமையை வெகுவாய்ச் சோதிப்பாள். 'இதுவரைக்கும் உயிரோடு இருக்கிறாயோ இல்லையோ விபரீதமாக இருந்தால் இவ்வளவு தூரம் உன்னைப் பேசவே விட்டிருக்காது. உனக்கு இனிமேல் ஏதாவது நேர்ந்தால், அது என் பொறுப்பு. விஷக்கடியைப் பற்றி எனக்குக் கொஞ்சம் அநுபவம் உண்டு. என்னை இரண்டு தடவை பாம்பு கடித்து நான் மீண்டிருக்கிறேன்.” அப்புறத்தான் உஷை சற்று அடங்குவாள். தெருவில் பிணம் போனால் ஜன்னலை இறுக சாத்தி விட்டு வெடவெடென உடல் உதற, சுவரோரத்தில் ஒடுங்கிக் கிடப்பாள், 'என் வீட்டில் எனக்கு நினைவு தெரிந்து சாவு நேர்ந்ததில்லை. எல்லோரும் நல்லபடியாக அப்படியே இருந்து விட வேண்டும். அம்மா முகத்தில் சிரிப்பு தோன்றும். பார் வேண்டாமென்றார்கள்? ஆனால் எல்லோரும் ஒரு நாள் போய்த்தானே. ஆகவேண்டும்?’ பிடிக்காத சமாசாரத்தைப் புதிதாய்க் கேட்டாற்போல், உஷை விழிப்பாள். மைக் இமிழைத் திறந்து வைத்தாற்போன்ற கண்களின் வென்னையை அடைக்க பெரிய கருவிழிகன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/165&oldid=1247263" இலிருந்து மீள்விக்கப்பட்டது