உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

17

இதழ்கள் 17

"அப்போ-அப்போ அம்மாவுக்கு நிஜமாயில்லியா? கேட்டேன். "இருக்கு. உனக்குக்கூட இருக்கு. அதெல்லாம் உங்கப்பா பத்திரமா 'பாங்கிலே வெச்சிருக்கா. உங்கப்பாகூட எடுக்க முடியாது. அவ்வளவு பத்தரம்." 'மறுபடியும் எல்லோரும் சிரிச்சா. எனக்குத்தான். புரியல்லே. ஆனால், ஏம்மா அந்த மாமி அப்படி கண்னை சிமிட்டாறா? சின்னா பதில் பேசவில்லை. சுவர்மேல் ஊரும் ஒரு மூட்டைப்பூச்சிமேல் அவள் நாட்டம் ஊன்றியது. மண்டை. எரிந்தது. . "ஏம்மா, பாங்குன்னா என்னம்மா? அங்கே வெச்சதை எடுக்க முடியாதா? ஏன், அப்பாதானே வெச்சா,அப்பாவையே கேளேன்!’ அப்பா நீ சொல்லப்பா!' குருவும் மடியில் கோர்த்த கைகளுடன், அதே மூட்டைப் பூச்சியை சித்தித்துச் கொண்டிருந்தான். ரத்தத்தைக் குடித்து உப்பி அதனால் வேகமாய்ச் செல்ல முடியவில்லை. யார் ரத்தத்தைக் குடித்து யார் தூக்கம் கெட்டால் அதற்கென்ன? இப்போதைக்கு அதன் வயிறு நிரம்பியிருக்கிறது. இதை நசுக்க எத்தனை நாழியாகும்? இல்லை. நசுக்கமாட்டேன். நசுக்கக் கூடாது, நசுக்கினால் எனக்குத்தான் அசிங்கம். அத்துடன் இன்னும் விருத்தியாகும். திடீர் என கழுத்தினின்று பிருகாவின் கைகளைப் பிடுங்கி எறிந்து, சின்னா மகள் முகத்தில் அறைந்தாள். “எத்தனை தடவை படிச்சுப் படிச்சு சொல்லியிருக்கேன் அங்கெல்லாம் போக வேண்டாம்னு? சின்னா எழுந்து விடுவிடென சென்றாள். வெந்நீருள்ளில் அண்டாவும் சொம்பும் உருண்டன. அப்பாவும் பெண்ணும் மெளனமாய் உட்கார்ந் திருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/17&oldid=1247296" இலிருந்து மீள்விக்கப்பட்டது