170
இதழ்கள்
} }{} இதழ்கள் பொத்தென வீழ்ந்ததும், வில் என உஷை அலறினாள். அவள் மடியில் ஒரு குருவிக் குஞ்சு, விழுந்த அதிர்ச்சியிலிருந்து சமாளிக்க முயன்றுகொண்டிருந்தது. பேஷ் ரொம்பத் தைரியசாலியாக இருக்கிறாயே!” அம்மா அதை அவள் மடியிலிருந்து எடுத்துக்கொண்டாள். அதன் திறந்த வாயின் தளிர்ச்சிவப்பு டால் அடித்தது. மேஜையை எடுத்துக்கொண்டு வா. த்ஸோ த்லோ. பூக்குழந்தை மேஜையைக் கொண்டுவந்தாயா?" மேஜையை நகர்த்தி வந்து அதன்மேல் நாற்காலியைப் போட்டு, நாட்டுப் பெண் பிடித்துக்கொள்ள, மாமியார் ஏறிக் கூட்டுக்குள் குஞ்சைத் தள்ளி வைத்தாள். அவளுக்கு ஒரு துளி அருவருப்புக்கூட இல்லை. அந்த நினைப்பிலேயே உஷைக்கு உடல் குலுங்கிற்று. “என்னடி சிவகாமு, மரத்துமேலே ஏறிக்கொண்டிருக் கிறாய்?’ என்று கேட்டுக்கொண்டே பக்கத்தகத்துப் பாட்டி வந்தாள். 'வாருங்கள் பாட்டி, வாருங்கள்.” அம்மா மெதுவாய்க் கீழே இறங்கினாள். "என்னத்தைப் பண்ணுவது பாட்டி? பேராண்டியைச் சீராட்டித் துரங்கப் பண்ணிவிட்டு இறங்குகிறேன்.” உஷைக்குச் சுருக்கென்றது. சில சமயங்களில் அம்மா வின் பேச்சில் பிடிபடாத தாதுக்களெல்லாம் பேசும். என்கிட்ட யாரும் சொல்லவில்லையே?’ பாட்டிக்கு முன்னது பின்னது மறந்துவிட்டது. ‘ஏண்டி பேத்தி?” “உஷை, ஏன் நின்று கொண்டிருக்கிறாய்? பாட்டிக்கு நமஸ்காரம் பண்ணேன்!” உஷைக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மாவின் கட்டளைப் படி பாட்டியை நமஸ்கரித்து அம்மாவையும் சேவித்தாள். 'நன்றாக இரு. மகராஜியாக! பிறக்கிறது பிள்ளையாகப் பிறக்க வேண்டும். எப்போது என்ன ஏது எல்லாம் எனக்குச் சொல்லியாக வேணும்டி குட்டி!' 'நீங்கள் நினைக்கிறபடி யெல்லாம் இன்னும் ஒன்றும் நடித்துவிடவில்லை, நேற்றைக்குத்தான் குளித்தாள். இந்த