உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

173

73

இதழ்கள் "தைரியமாவது, பாட்டி என் குழந்தைகள் போய் நான் இருக்க வேண்டும் என்று இருக்கிறபோது, கடவுள்தான் நெஞ்சைக் கல்லாய் அடித்து விடுகிறானே!” திடீரென உஷைக்கு உடல் புல்லரித்தது. ஏதோ தரிசனம் கண்டாற்போல். தைரியம், பயம் இரண்டுக்கும் வித்தியாசங்கள்-ஒற்றுமைகள், எது தைரியம் எது பயம் என்னும் சந்தேகங்கள், ஊமைக் கணாக்கள், ஊசிக்காதில் யானை புகுந்து வெளிப்பட்டது எப்படி என்பதெல்லாம் ஒருங்கே வெளிச்சமானாற்போல் மண்டையோட்டின் உன் தகட்டில் ஒரு மின்வெட்டுத் தோன்றி மறைந்த உணர்ச்சி உடலை ஊடுருவிற்று. அந்த வேகம் தாங்கக்கூடியதாக இல்லை. உடல் கிடுகிடென்று ஆடிற்று, கட்டில் சட்டத்தைக் கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

தென்றலின் மூச்சு எழுந்து முகத்தில் மோதியது. அவள் மேல் பூக்கள் சொரிந்தன. அம்மா கொல்லைப்புறத்து மதிள்'சுவரில் எதையோ உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். தனக்குப் புதிதாய்த் திறந்த கண்களுடன் உஷை அவளைக் காண் கையில் அவள் ஏதோ ஒளிவட்டத்தின் நடுவில் நின்று கொண் டிருந்தாற்போல் தோன்றிற்று. ஒரே சமயத்தில் மேல் அன்பு, அச்சம், வியப்பு எல்லாம் அவளுள் கிளர்ந்த மெதுவாய் அவள் பக்கவில் போய் நின்றாள். அவளை அறி யாமல் கைகள் பிசைந்தன. அவள் வந்ததை அம்மா அறிவாள் எனினும், கண்ட தாய்க் காட்டிக்கொள்ள மாட்டாள். சுவர்மேல் நாட்டம் மாறாமலே, என்ன உஷை, பக்கத்தகத்துப் பாட்டி உனக் காக வக்காலத்துப் பேசுகிறாளே! எனக்கு நேற்றைக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அவள் என்ன, நான் படுத்துகிற மாமியாரில் சேர்த்தியாய் உனக்குப் படுகிறதோ?’ என்றாள். உஷை நடுநடுங்கிப் போனாள். நான் ஒன்றுமே சொல்ஸ் வில்லையே, அம்மா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/173&oldid=1247271" இலிருந்து மீள்விக்கப்பட்டது