உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

இதழ்கள்

j 74 இதழ்கள் 'நீ சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி, என் சுபாவத்தில் எது மற்றவர்களுக்குப் பிடிக்கிறதோ பிடிக்க வில்லையோ, என்னை நான் இனி மாற்றிக்கொள்ள முடியாது; எனக்கு மாற்றிக்கொள்ளக் கூடிய வயசும் இல்லை என்று தெரியுமோ இல்லையோ?” உஷையின் விழிகள் பெருக்கெடுத்தன. நான் ஒன்றுமே சொல்லவில்லையே. அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள் ធ្វ!' அம்மா அவள் பக்கம் திரும்பினாள். 'ஏதுக்கு மன்னிக்க உஷை உடனே குழப்பமடைந்தாள். அவளுக்கே புரிய வில்லை. வார்த்தைகள் தட்டுக்கெட்டுத் தாமே வெளிப் கட்டன. தான் இந்த மாதிரி தைரியம் இல்லாத கோழை யாக இருக்கிறேனே, அதற்கு.” அம்மாவின் கண்கள் உஷையின் மேல் தங்கின. அவள் முகத்தில் லேசாய்ப் புன்னகை படர்ந்தது, அவள் பார்வை கூடச் சற்று இளகிற்றோ? தைரியமாய், தைரியம் என்றால் என்ன, அம்மா?’ என்றாள். 'இதோ பார், இதுவும் ஒரு தைரியந்தான். அம்மா மதிள்சுவரில் தான் பார்த்துக் கொண்டிருந்த இடத்தைச் சுட் டிக் காட்டினாள், இந்தச் செடியைப் பார்த்தாயா? இந்தக் கல்சுவர் நடுவில் ஒரு துளிக்கீறல் மண்ணில் எப்படி ஒரு விதை விழுந்து முளைத்துத் தைரியமாய் இலை விட்டிருக்கிறது என்று இத்தனை நாழிகை யோசனை பண்ணிக் கொண்டிருந் தேன். நீயும் வந்தாய்.” அம்மாவின் ஆழ்ந்த பார்வையில் தன் முகம் சிவப்பது அவளுக்கே தெரிந்தது. புரியாத விசனம் லேசாய் அவளுள் படர்ந்தது. நான் ஏன் இப்படி இருக்கிறேன்?’ என்று தனக்கே சொல்லிக் கொண்டாள். அம்மா அவள் தோள்மேல் கை வைத்தாள். உவுை, நீ எப்படியும் இல்லை. சரியாய்த்தான் இருக்கிறாய். உனக்கு ஒன்றுதான் தெரியவில்லை. உலகம் முழுவதும் வியாபித் திருக்கிற உயிருக்கு உன் உடல் ஒன்றுதான் உண்டு என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/174&oldid=1247272" இலிருந்து மீள்விக்கப்பட்டது