உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இதழ்கள்

fog, இதழ்கள் தருகிறேன். ஆனால் இதை நீ லேசாக நினைக்காதே. என் தாவுக்குத் தாத்தா நாளிலிருந்து நான்கு தலைமுறை களாக நம் வீட்டில் இது இருக்கிறது. அவருக்கு ரொம்பப் பக்தி, ஆசாரம், பூஜை, புனஸ்காரம் எல்லாம் உண்டு. தேவி உபாசகர். நவராத்திரி ஒன்பது நாளும் சாப்பிடமாட்டார். ஒரே வேளை ராத்திரி ஒரு தம்ளர் பால்; அவ்வளவுதான். பூஜையிலே உட்கார்ந்தால் நேரம் போவதே அவருக்குத் தெரியாதாம். அது மாதிரி ஒரு நாள் தம்மை மறந்த நிலையில் அந்தப் பாலையும் குடிக்கவில்லை. மறுநாள் காலை, ஐயோ, கொடுக்க மறந்துவிட்டேனே' என்று பாட்டி பதறிப் போய்ப் பால் பாத்திரத்தைத் திறந்து பார்த்தால் உள்ளே பால் இந்தச் சங்கு ரூபத்தில் அப்படியே உறைந்து போயிருந்ததாம். தாத்தாவிடம் கொண்டுபோய்க் காண்பித்தாள். இது தேவி 'பிரசாதம் என்று சொல்லிப் பூஜையில் வைத்து விட்டார். அன்றையிலிருந்து குடும்பத்தில் ஒவ்வொரு குழந்தை பிறக்கிற போதும் இந்தச் சங்கில் தானே பால் நிறைந்திருக்குமாம். தாய்ப் பாலுக்கு முன்னால் இந்தச் சங்குப் பாலைத்தான் குழந்தைக்குப் புகட்டுவார்களாம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தடவை நிறையும்; அவ்வளவுதான். 'நீ இந்தக் காலத்துப் பெண்ணாய், இதெல்லாம் நிஜமா, தடத்திருக்குமா, சாட்சி நிருபனை எல்லாம் கேட்காதே. இந்தச் சங்கின் ஐதிகத்தைப் பற்றி எனக்கும் இவ்வளவுதான் தெரியும். அந்த நாளெல்லாம் நம்புகிற நாள். ് ‘நாள் ஆக ஆகப் பின்னால் வருகிற சந்ததிகளுக்குப் பக்தி, சிரத்தை, ஐதிகம், நம்பிக்கை, சீலம் எல்லாம் குறைந்து போய் விட்டன. அந்த அழுக்கு ஏற ஏற, குடும்ப வளங்களும் ஒடுங்கிப் போயின. நாளடைவில், இந்தச் சங்கு, பூஜைப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டு, வீட்டுக் குழந்தைகளின் விளையாட்டுச் சாமானாக மாறி, அப்புறம் அந்த மதிப்பும் போய், கண்டான் முண்டான் சாமான் பெட்டிக்குள் மாட்டிக் கொண்டுவிட்டது. என் அத்தைதான் அதை அங்கிருந்து தப்ப வைத்தாள். அப்போதெல்லாம் அலமாரியில் விக்கிர கந்தான் இருந்தது. பூஜை, அபிஷேகம், தனி நைவேத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/176&oldid=1247274" இலிருந்து மீள்விக்கப்பட்டது