பக்கம்:இதழ்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

177

இதழ்கள் #77

யங்கள் எல்லாம் ஜாடாவாக நின்று போயின. தின்கிற சோற்றைச் சாமிக்கு மறக்காமல் காண்பித்துவிட்டு, தின்றால் அதுவே பெரிது! அதே மதிப்பில், இந்தச் சங்கும் அலமாரியில் ஒரு மூலையில், என் அத்தை புண்ணியத்தில் கிடந்தது. 'அத்தையின் தலையெழுத்து, சின்ன வயசிலேயே, அகத் துக்குத் திரும்பி வந்துவிட்டாள். நிறையப் புக்ககத்துச் சொத்தோடே. அத்தைக்கு நல்ல மனசு, எல்லோர் மேலும் அவளுக்குப் பட்சம்; எல்லோரையும் நம்பிவிடுவாள். உடன் பிறந்தவர்களும் மன்னிகளும் அவள் சொத்தைச் சுரண்டிச் சுரண்டிக் கரைத்து, அவரவர்கள் காசியத்தைப் பார்த்துக் கொண்டு, அவளை ஒட்டாண்டியாக்கி அகத்துக்குச் சமையல் காரியாக்கி, அப்புறம், நீ வைத்துக் கொள்கிறாயா, தான் வைத்துக் கொள்ளட்டுமா? என்று ஏலம் கூற ஆரம்பித்து விட்டார்கள். 'ஆனால் அப்போதும் அத்தைக்குப் புத்தி வரவில்லை. அவளே கொஞ்சம் அசடு. இருக்கட்டும் இருக்கட்டும், என் வாஞ்சி தலையெடுக்கட்டும், அப்போது அல்லவா இவர்கள் அத்தனை பேருக்கும் இருக்கிறது!’ என்று வீரியம் பேசிக் கொண்டிருந்தாள். ஏனோ தெரியவில்லை. அத்தைக்கு அவன் மேல் உ.சிர். "ஆனால் வாஞ்சியாவது, தலையெடுக்கிறதாவது வாஞ்சி என் அண்ணன். படிக்கிற நாளும் உழைக்கிற நாளும் உடம்பு வணங்காமல் திரிந்துவிட்டு, உலகத்தில் இருக்கிற கெட்ட பழக்கங்கள் அத்தனைக்கும் இருப்பிடமாகி, ஒரு நாள் பிழைக்கப் போகிறேன் என்று கடல் தாண்டிக் கண்காணாமல் போனவன்; இப்போது அவன் பிழைத்திருக்கிறானா, இல்லையா என்றுகூட எனக்குத் தெரியாது. 'அத்தை வீணாய்ப் போய் வீட்டுக்கு வந்தபின், வாஞ்சி தான் குடும்பத்தில் முதல் குழந்தை, அவனை அப்போதி லிருந்து எடுத்துச் சீராட்டித் தாலாட்டித் தன் தீராத ஆசை களையும் நிறைவேறாத லட்சியங்களையும் அப்படியே அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/177&oldid=1247275" இலிருந்து மீள்விக்கப்பட்டது