180
இதழ்கள்
}:{{j இதழ்கள் பொய்யோடு நிஜம் சேர்ந்து பொய்யாவது, நிஜத்தோடு பொய் சேர்ந்து நிஜமாவதிலே சேர்த்தி.” அம்மா பெருமூச் செறிந்தாள். நீண்ட நாழிகை பேசி விட்டாள். அவளுக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தது. 'ஏதுக்கு இந்தப் பேச்சு வந்தது? ஆ, தைரியத்தைப் பற்றி அல்லவா இந்தச் சம்பவம் நிகழும் போது அத்தைக்குக் குறைந்தது ஐம்பத்தைந்து வயசாவது இருக்கும். இத்தனைக் கும் அவள் வாஞ்சியைப் பெற்ற தாய்கூட அல்ல. இருந்தும் தாய்மை என்கிற உணர்ச்சிக்கு அத்தனை சக்தி இருக்கிறது. இல்லாவிட்டால், அத்தனைநாள் கழித்துப் பேசாத இடத்தில் பேசி, வாஞ்சியின் உயிரைக் காப்பாற்ற முடியுமா? உயிரின் தைரிய லட்சணத்திற்கு இதைவிட அத்தாட்சி எது?” உஷை கீழே விழுந்து அம்மாவின் கால்களைக் கெட்டி யாய்ப் பிடித்துக் கொண்டாள். 'அம்மா, நீங்கள் சொல்லுங்கள். எனக்குத் தைரியம் வருமோ? அம்மா அவள் மேல் குனிந்தாள். அவ்வளவு பரிவுடன் உஷை அம்மாவை என்றும் பார்த்ததில்லை. அவன் கையை இழுத்து அவள் அடிவயிற்றின் மேல் வைத்து அம்மா அழுத்தினாள். 'உஷை, பார், உன் வயிறு எவ்வளவு மெதுவாக இருக் கிறது.! உன் நெஞ்சோடு பிறந்த பயத்தை என்றைக்கு உன் உடல் உதறுகிறதோ, உன் குடும்ப வித்தை ஏற்றுத் தாங்க அன்றைக்கு உனக்குத் தைரியம் வரும்.” "நீங்கள் சொல்கிற தைரியம் எனக்கு எப்போது வரும்?” 'வரும், அதன் வேளை வரும் போது-’ வேளை என்றால் என்ன?” . அம்மாவுக்குத் திடீரென்று முகம் கடுத்தது. உஷை வீட்டுக் காரியங்கள் போட்டது போட்டபடி கிடக்கின்றன. கதை கேட்டது போதும்; வேலையைப் பார்!’ இனி அம்மா பேச மாட்டாள். அவளுக்குச் சுயநினைவு வந்து விட்டது. அவள் தன் கவசங்களுள் புகுந்து விட்டாள்,