பக்கம்:இதழ்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

183

இதழ்கள் 183

டிருக்கும். சாக்கடை ஜலமும் குடி. ஜலமும் சர்வம் ஐ - * தினம் வேளா வேளைக்கும் வேளையில்லாத வேளையிலும் வாங்கிலியாமா? என்று கழுத்தை அதுக்கும் காப்கதி: கூடைக்காரி இன்று கண்ணிலேயே படவில்லை. r மார்க்கெட்டுக்குப் போகவோ, சாமான் வாங்கி வரவோ உடம்பு வணங்காது. ஆனால் கலத்தில் மாத்திரம் அஞ்சும் மூன்றும் அடுக்காய் விழ வேண்டும். இன்று இலையில் சுட்ட அப்பளத்தைப் போடும்போது அல்லவா இருக்கிறது. குஸ்தி? சே, இதென்ன பிழைப்பு! புருஷன் மனைவி சச்சரவுகள். இப்போதெல்லாம் இலை மறைவு தலைமறைவு பார்ப்பதில்லை. அன்ற வாசற்படி தாண்டிக் கூடத்துக்கு வந்து எத்தனையோ நாட்கள் ஆகி விட்டன. எப்போது எப்படி மூளும் என்று அவர்கனே அறி யார். யார்மேல் குற்றமாக இருந்தாலும் நாலு வார்த்தை அவன் சொன்னால் ஒரு வார்த்தையாவது திருப்பிக் கேட்கும் படிதான் தோன்றிற்று. உடனே ஒன்று ஒன்பதாகிவிடும். குருவுக்கு எல்லாமே வேடிக்கை; எப்போதுமே கேவிதான் அவனுடைய வேடிக்கைகளும் கேலிகளும் எப்போதுமே சிரிப்பு மூட்டுவனவாக இல்லை. அவனுடைய கோபங்களுக்கு எப்போதுமே தணிந்து போக முடியவில்லை. அவனுடைய பொறுப்பற்ற, கவலையற்ற, எப்போதுமே சிரித்த முகத்தைப் பார்க்கையில் அவளுக்கே சில சமயங்களில் தோன்றும், தானே வலுச்சண்டைக்கு இழுக்க வேண்டும் என்று. - அவர் எப்படியேனும் போகட்டும்; நான் ஏன் இப்படி, ஆகிவிட்டேன்? அவர்களை அடக்கிக் கட்டி கேய்த்துக் கொண்டு போக இப்போது அம்மாவும் இல்லை. அவள் காலம் ஆகிவிட்டது. திடீரென்று, ஒரு நாள் காலை, அம்மா ஏன் இன்னும் எழுந்திருக்கவில்லையே என்று போய்ப் பார்த்தால், துரக்கத்தின் மூச்சு, உயிரின் சுவாசமாய் இழுத்துக் கொண் டிருந்தது. பெரியவர்கள் இருப்பதில், இடைஞ்சல்கள் பல இருந் தாலும், அவர்கள் இல்லாததால் நேரும் இம்சைகள் :#; -: 念

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/183&oldid=1247281" இலிருந்து மீள்விக்கப்பட்டது