184
இதழ்கள்
134 இதழ்கள் விட அதிகமாக இருக்கின்றன. அம்மா போனதும் விடு 'லொட்டெனே ஆகிவிட்டது. அம்மா போவதற்கு முன்னாலேயே, உஷையின் பக்திப் பெருக்குத் தணிந்து ஓய்ந்து வறண்டு எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. இத்தனை கேலிக்கும் கிண்டலுக்கும் இடையில் அது எப்படி வளரும்? "அவரவர் புசித்து கொண்டதற்குத் தக்கபடி இருதயம் ஆத்த்தத்துத் தக்கபடி.” சொன்னவர் போனாலும் சொன்னவர் சொன்ன வார்த் தைகள் இன்னும் சீண்டிக் கொண்டுதான் இருக்கின்றன. இப்போதைக்குத் தெரிந்தது ஒரு பெரும் அசதிதான். நெஞ்சில் பூஞ்சைக் காளான் பூத்துப் படர்ந்து கொண் டிருந்தது. குருவிடம் ஆதரவு அதிகம் எதிர்பார்ப்பதற்கில்லை. ஆண் களுக்கு என்ன! இரண்டு தடவை வெளியே போய் வளைய வந்தால் பொழுது ஒடிவிடுகிறது. அவர் சுபாவம் தனி. இருக்கட்டும். தான் மூஞ்சியைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தால் அவரையும் தொங்கப்போட்டுக்கொள்ளச் சொல்ல முடியுமா? “உஷா, உஷா!-ஏ உஷா ஆ ஆ!!” பதில் குரல் கொடுக்காமலே, உஷை சர்வ மெதுவாய் எழுந்து கீழே சென்றாள். நன்றாகக் கதவை உடைக்கட்டும். என்றைக்குமே இந்த ஆர்ப்பாட்டத்தானே? கதவைச் சரியாய்த் திறப்பதற்குள், தள்ளிக் கொண்டு குரு புயல்போல் உள் நுழைந்தான். குரு தனியாக இல்லை. "மிஸ் பீனா, என்ன வெளியிலேயே நிற்கிறீர்களே! வாருங்கள், வாருங்கள். உஷை, இடி இடி என்று இடிக் கிறேனே, காது செவிடாகி விட்டாயா? சூடாகக் காபி இரண்டு கப் கொண்டு வாயேன்.” குரு சொன்ன மாதிரி உஷைக்குக் காது கேட்டதோ இல்லையோ?அவள் கவனம் முழுவதும்அவன் பின்னால் நின்ற