உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

185

இதழ்கள் #85

உருவத்தின் மேல் சென்றிருந்தது. மறையிருளில் அங்கங்கள் புலப்படவில்லை. 'வாருங்கள், வாருங்கள், மிஸ் பீனா. இவள்தான் உஷை என் மனைவி. சங்கோசப்படாதேயுங்கள். உங்கள் வீடு மாதிரி.’’ அரைத் துரக்கத்தில் கேட்கும் வெள்ளி மணிகளின் கிண் கிணிப்பு: வெட்கப்பட்ட முனகல் சிரிப்பு. வெளியிருட்டி லிருந்து உள் வெளிச்சத்தில் அந்தத் தோற்றம் குகையில், உஷை கண்டது முகமல்ல, மூக்கல்ல, விழியல்ல; உயர்ந்த் சந்தனக் குழம்பு நிறத்தில், தந்தத்தால் கடைந்த உடல்மேல், மழை நனைப்பில் சதையோடு சதையாய் ஒட்டிக் கொண்ட நீல ஜார்ஜெட் புடவையின் அடியிலிருந்து பிதுங்கிய வடிவ மேடுகளும் பள்ளங்களும், சரிவுகளும்,குழைவுகளும், ஸாட்டின் ரவிக்கை முடிச்சடியில் வழிந்த அடிவயிற்றின் தளதளப்புமே. உஷையின் பார்வை எதிரில் எழுந்தன. பழுக்கக் காய்ச்சிய குடைக் கம்பியால் யாரோ நெற்றிப் பொட்டில் துருவியது போலிருந்தது. செவிகளிலும் மூக்கிலும் வாயிலும் கண் களிலும் ஆவி பறந்தது. சுவரைப் பிடித்துக் கொண்டாள். அந்தப் பெண் வாசற்படியிலேயே தயங்கி நின்றாள். 'இல்லை மிஸ்டர் குரு, மழை நின்று விட்டது. நான் போய் வருகிறேன்.” . சேசே, என்ன இப்படியா! உஷை உஷை!” உஷை தாள்ளாடித் தள்ளாடி, படிப்படியாக எண்ணி எண்ணி, மாடியேறினாள். இப்படியும் ஓர் அசதி உண்டா என்ன? கட்டிலில் விழுகையில் தன்னோடு கண்ணாடியில் இன்னோர் உருவமும் தொப்பென்று விழுவதைக் கண்டாள். அடையாய் நரைத்த தலையுடன் சுண்டி அடையாளமே மாறிப்போன கிழட்டு முகம். தடதடவென்று ஒரு தாண்டில் இரண்டு படிகளாக அவன் ஏறி வரும் சப்தம் எங்கிருந்தோ வந்தது. 'உஷை' அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. என்ன இன்றைக்கு உனக்கு? மக்கர் பண்ணு கிறாய் வந்தவளை வா என்று சொல்லக் கூட வாய் இட்-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/185&oldid=1247283" இலிருந்து மீள்விக்கப்பட்டது