உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

இதழ்கள்

138 இதழ்கள் சரி, அப்படியே வைத்துக்கொள்.” கடித்த பற்கணி னிடையிலிருந்து வார்த்தைகள் சீறின. 'உண்மைக்கும் உண்மை யல்லாததற்கும் வித்தியாசம் உனக்குத் தெரியுமானால் உன் மேதாவித்தனம் உன்னோ டேயே இருக்கட்டும். உன்னிடம் நான் எதையும் ருஜாசப் படுத்திக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. நான் ஆண் பிள்ளை; என் இஷ்டம், உன் புடவைத் தலைப்பில் என்னை நீ முடிந்து வைத்துக்கொண்டு இல்லை. முடிந்துகொள்ள முடியாது. முடிந்து கொள்ளவும் விடமாட்டேன். உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள்.” கதவைத் தடாலென்று சாத்திக்கொண்டு வெளியே சென்றான். உஷை மடாரென்று கீழே விழுந்து விட்டாள். 翼 - 羲 X நினைவு திரும்பியதும் உஷைக்கு முதல் முதலாய்த் தெரிந்தது. உடலை முறித்துப் போட்ட ஒர் அசதி. கண்ணிமைகளைத் தூக்க முடியாதபடி ஒரு கல்கனம் மேலே அழுத்திற்று. தீவிர முயற்சியில் அதைப் புரட்டிவிட்டுக் கண் களைத் திறந்தாள். மேகங்களைக் கிழித்துக் கொண்டு, அழுத முகத்துடன் சூரியன் புறப்பட்டுக் கொண்டிருந்தான். வானவெறிச்சில் ஒர் ஒற்றைப் பட்சி திசையற்றுப் பறந்துகொண்டிருந்தது. முந்திய மாலையின் நிகழ்ச்சிகள் பழைய வேகத்துடன் புரண் டெழுந்தன. எழுந்து உட்கார்ந்து சுற்று முற்றும் நோக்கினாள். குரு வீடு திரும்பிய அடையாளங்கள் ஒன்றும் இல்லை. போட்டது போட்டபடி, இனிமேல் இவ்வளவுதான். பிர யோசனம் இல்லை, பிரயோசனம் இல்லை. இறங்கிக் கீழே சென்றாள். வீடு ஜோ வென்றிருந்தது, போட்டது போட்ட படி, எதுவும் பிரயோசனம் இல்லை, இதுதான் முடிவின் ஆரம்பம். போதுமடாப்பா, போதும் இந்த ஜன்மம் எல் Gఖఆఆ இருக்கும் அலுப்பு எனக்கு மாத்திரம் இல்லையா দুTaঠ ৫ম ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/188&oldid=1247286" இலிருந்து மீள்விக்கப்பட்டது