இதழ்கள்
19
இதழ்கள் 19
இந்த உணர்வில் நான் என்னையே உணர்கிறேன். -ப்பா ப்பாகைகளை ஆட்டிக்கொண்டு குழந்தை பலமாய்ச் சிரித் தான். மேல்வாயில் அப்போதுதான் வெளி வந்துகொண் டிருக்கும் பல் முத்துக்கள் இரண்டில், இகரின் நீரோட்டம் பள பளத்தது. கண்மேல் வழியும் மயிர் சரடுகளின் ஒளி ஒளிந்து விளையாடிற்று. பிருகா கண் முழிக்கிறபோதே ராகம் வைக்கிறாயே, உடனுடத்தவனைப் பார்.’ "அப்பா அப்பா எனக்கு ஆசையாயிருக்கப்பா, பாப் பாவை என் மடியிலே வைப்பா.” 'தெல்லாம் முடியாது குரு,குழந்தையைத் தோள்மேல் போட்டுக் கொண்டு ஆட்டினான். உன்னைக் குடை சாய்த்து விடுவான்.” பிருகாவைத் திடீரென அசூயை கவ்விற்று. கைகளை இறக்கை விரித்துக் கொண்டு நின்றாள். ‘என்ன பிருகா பறக்கப் போறையா?" ‘தூக்கு அப்பா என்னை பிருகா கட்டளையிட்டாள். அவள் புருவங்கள் நெறிந்தன. - ஒஹ்ஹொஹ்ஹோ அப்படியா சமாச்சாரம்? தெல்லாம் முடியாது. குரு குழந்தையைத் தூக்கிப் பிடித்தான்' பாப்பாவின் கிறீச்சிட்ட சிரிப்பு அவன் முகத்தில் பீச்சி யடித்தது. பிருகாவுக்கு நெஞ்சில் பிராண்டல் தாங்க முடிய வில்லை. பற்கள் நறநறத்தன. அப்பா துரக்கு என்னை‘உன்னை எதுக்குத் துரக்குகிறது? அம்பிப் பாப்பாவை மாத்திரம் துரக்கிண்டிருக்கையே? அம்பிப் பாப்பா தங்கப் பாப்பா. எவ்வளவு சிவப்பா யிருக்கிறான் பார். டேய், ரெக்கு தோற்றதுடா உனக்கு.” "நான்தான் சேப்பு- பிருகா சட்டையைத் தூக்கி, தன் உடம்பை சந்தேகத்திற்குப் பார்த்துக்கொண்டாள். யார் சொன்னது? நீ கரிவிஷ்டைன்னா!"