190
இதழ்கள்
j90 இதழ்கள் என்னைக் கடி. ஒரு வழியாய் என்னை முடி இல்லையோ, என் விரலை நக்கு என் பயத்தை நக்கு. என் குடும்பச் சாபத்தை நக்கு." - - புற்றின் அடிவாரங்களிலிருந்து ஏதோ வழிந்து குழைந்து எழுவதுபோல் தோன்றிற்று. உஷை கண்ணை மூடிக்கொண் டாள். ஒரு பெரும் கேவல் அவளிடத்தினின்று கிளம்பிற்று. 'உஷை, உஷை!’ உஷைக்குத் தலை சுற்றிற்று. கால்கள் விட்டுக் கொண்டன. மேடையிலிருந்து கீழே உருண்டாள். குரு அவளை அப்படியே இரு கைகளாலும் வாரிக் கொண்டான். Χ X X வேளை வந்ததும் உவுை ஒர் ஆண் மகவை ஈன்றாள். ஜாடை அப்படியே அம்மாவை உரித்து வைத்திருந்தது. அம்மாவின் சங்கில் தன் பாலைக் கறந்து உஷை குழந் தைக்குப் புகட்டினாள். அவள் முதுகை யாரோ ஆதரவாய்த் தடவினாற் போலிருந்தது. உஷைக்கு உடல் சிலிர்த்தது. இருதயம் பூத்ததற்குத் தக்கபடி, அவரவர் எண்ணத்துக்குத் தக்கபடி, எண்ணம் கைகூடினதற்குத் தக்கபடி.”